பாடல் #8546
துதித்திடுவேன் தூயர் இயேசுவை
🔤 Thuthitthituvaen Thooyar Yesuvai
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Latin Disco
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்திடுவேன் தூயர் இயேசுவை தூய ஆவியால் நிறைந்து மகிழ்ந்து துதித்துப் போற்றிடுவேன் (2) 1.அக்கினிச் சோதனை அலை மோதும் போதும் உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மாலே மதிலைத் தாண்டிச் சென்றிட பெலனும் ஈந்தீரே உம்மைப் போற்றாமல் துதியாமல் இருப்பேனோ- (2) 2.முன்னும் பின்னும் உம் வழியை அறியாமல் திகைக்கும் வேளையிலே செம்மையான பாதையில் நடக்க வழியையும் காட்டினீரே உம்மைப் போற்றாமல் துதியாமல் இருப்பேனோ? -(2) 3.பெருவெள்ளம் சீறி மோதுகையில் பெருங் கன்மலையின் நிழலுமானீர் உறுதியாய் உம்மில் நிலைத்து நிற்க உறைவிடம் அளித்தீரே உம்மைப் போற்றாமல் துதியாமல் இருப்பேனோ? - (2) 4யோர்தான் போன்ற சோதனைகள் பிரவாகித்து வரும் வேளையிலே மனம் பதறாமல் நிலைத்து நின்று கனி தரச் செய்தீரே உம்மைப் போற்றாமல் துதியாமல் இருப்பேனோ? - (2) 5.கட்டுகள் காவல் சூழ்ந்திடும் வேளை கர்த்தர் எனக்காக யாவையுமே செய்து முடிப்பார் என்ற வல்ல நம்பிக்கை அளித்தீரே உம்மைப் போற்றாமல் துதியாமல் இருப்பேனோ? - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthituvaen Thooyar Yesuvai Thooya Aaviyaal Nirainthu Makizhnthu Thuthitthup Porrituvaen (2) 1.akkinich Sodhanai Alai Mothum Pothum Ummaalae Saenaikkul Paaynthituvaen Ummaalae Mathilaith Thaantich Senrida Pelanum Eentheerae Ummaip Porraamal Thuthiyaamal Iruppaeno- (2) 2.munnum Pinnum Um Vazhiyai Ariyaamal Thikaikkum Vaelaiyilae Semmaiyaana Paathaiyil Natakka Vazhiyaiyum Kaattineerae Ummaip Porraamal Thuthiyaamal Iruppaeno? -(2) 3.peruvellam Seeri Mothukaiyil Perung Kanmalaiyin Nizhalumaaneer Uruthiyaay Ummil Nilaitthu Nirka Uraividam Alittheerae Ummaip Porraamal Thuthiyaamal Iruppaeno? - (2) 4yorthaan Pondra Sodhanaigal Piravaakitthu Varum Vaelaiyilae Manam Patharaamal Nilaitthu Ninru Kani Tharach Seytheerae Ummaip Porraamal Thuthiyaamal Iruppaeno? - (2) 5.kattugal Kaaval Soozhnthitum Vaelai Kartthar Enakkaaga Yaavaiyumae Seythu Mutippaar Endra Valla Nampikkai Alittheerae Ummaip Porraamal Thuthiyaamal Iruppaeno? - (2)