பாடல் #8613
பயப்படாதே நான் மீட்டெடுத்தேன்
🔤 Payappataathae Naan Meettetutthaen
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: A
🥁 Beat: 6/8 Slow Rock
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே நான் மீட்டெடுத்தேன் கலங்கிடாதே உன்னைக் கண்டெடுத்தேன் 1.மன்னா பனி மழை பொழியும் கன்மலை தண்ணீர் சுரக்கும் இன்றும் என்றும் திருப்தியடைவாய் ஒருபோதும் கைவிடமாட்டேன்- பயப்படாதே 2.மேகத்தின் நிழல் என்றும் நடத்திடும் அக்கினி ஒளியை அனுப்பிடும் முன்னும் பின்னும் நான் வருவேன் என் அன்பில் வளர்ந்து வாழ்வாய்- பயப்படாதே 3.ஒன்றுக்கும் கவலைப்படாதே என்றுமே ஜெபத்தையும் விடாதே அல்லும் பகலும் உன்னை நடத்தி அன்னை போலத் தாங்குவேன் - பயப்படாதே 4.கீதம் பாடி மகிழுவாய் வெற்றியின் பாதை உன் சொந்தமே சுகத்தையும் பெலனையும் ஆசீர் தந்தேனே கண்மணி போல காப்பேன் - பயப்படாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Naan Meettetutthaen Kalangkitaathae Unnaik Kantetutthaen 1.mannaa Pani Mazhai Pozhiyum Kanmalai Thanneer Surakkum Inrum Enrum Thirupthiyataivaay Orupothum Kaividamaattaen- Payappataathae 2.maegatthin Nizhal Enrum Natatthitum Akkini Oliyai Anuppitum Munnum Pinnum Naan Varuvaen En Anpil Valarnthu Vaazhvaay- Payappataathae 3.onrukkum Kavalaippataathae Enrumae Jebatthaiyum Vitaathae Allum Pakalum Unnai Natatthi Annai Polath Thaangkuvaen - Payappataathae 4.keedham Paati Makizhuvaay Verriyin Paathai Un Sondhamae Sugatthaiyum Pelanaiyum Aaseer Thanthaenae Kanmani Pola Kaappaen - Payappataathae