பாடல் #737
யாக்கோபின் தேவன் என்
🎙 Bro. ஜான்சம் ஜாய்சன் • 💿 கருணையின் பிரவாகம்
யாக்கோபின் தேவன் என் தேவன் எனக்கென்றும் துணை அவரே எந்நாளும் நடத்துவாரே (2) 1.ஏதும் இல்லை என்ற கவலை இல்லை துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2) சொன்னதை செய்திடும் தகப்பன் அவர் நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின் 2.என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2) தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார் நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்