பாடல் #7218
அறிந்து கொண்டேன் உந்தன்
🔤 Arinthu Kontaen Undhan
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறிந்து கொண்டேன் உந்தன் அன்பினை புரிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை எவ்வளவோ எவ்வளவோ உயர்ந்தது உம் அன்பு அளவே இல்லாதது என் வழிகளைப் பார்க்கிலும் உமது வழிகளும் என் நினைவைப் பார்க்கிலும் உமது நினைவும் மேலானது மிகவும் பெரியது உம் போசனைகளோ என்றும் அருமையானது கறுப்புநிறம் என்று என்னை வெறுத்திடவில்லை தள்ளாடி வீழ்ந்தபோதும் மறந்திடவில்லை ரூபவதியே எனது பிரியமே என்று அழைத்தீர் என்னை அள்ளி அணைத்தீர் என்புறாவே உத்தமியே எனது நேசமே என்று நேசர் கூப்பிடும் சத்தம் கேட்குதே சார்ந்து கொள்ளுவேன் எனது நேசரை கன்மலையின் வெடிப்பிலே தங்கி வாழுவேன் எனது பிரியம் எனதுநேசர் எந்தன் இயேசுவே எல்லையென்பதில்லையே உமது அன்பிற்கே நேசப்பார்வையால் என்னைக் கண்டீரே நேச அக்கினி என்னில் பற்றியெரியுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arinthu Kontaen Undhan Anpinai Purinthu Kontaen Undhan Paasatthai Evvalavo Evvalavo Uyarndhathu Um Anpu Alavae Illaadhathu En Vazhigalaip Paarkkilum Umathu Vazhigalum En Ninaivaip Paarkkilum Umathu Ninaivum Maelaanathu Migavum Periyathu Um Posanaigalo Enrum Arumaiyaanathu Karuppuniram Enru Ennai Verutthidavillai Thallaati Veezhndhapothum Maranthidavillai Roobavathiyae Enathu Piriyamae Enru Azhaittheer Ennai Alli Anaittheer Enpuraavae Utthamiyae Enathu Naesamae Enru Naesar Kooppitum Sattham Kaetkuthae Saarnthu Kolluvaen Enathu Naesarai Kanmalaiyin Vetippilae Thangki Vaazhuvaen Enathu Piriyam Enathunaesar Endhan Yesuvae Ellaiyenbathillaiyae Umathu Anpirkae Naesappaarvaiyaal Ennaik Kanteerae Naesa Akkini Ennil Parriyeriyuthae