பாடல் #716
இம்மானுவேலன் பிறந்தார்
🔤 Immaanuvaelan Piranthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேலன் பிறந்தார் என்னுடன் இருந்திடவே எந்தனின் பாவமகற்ற என்னுள்ளே உதித்துவிட்டார் 1. அடிமை என்னை நோக்கிப் பார்த்தார் தாழ்ந்த என்னை த் தூக்கிவிட்டார் அன்பின் தேவன் அவனி வந்தார் அன்பால் என்னை அணைத்துக்கொண்டார் அவரின் நாமம் அதிசயமே ஆலோசனை தரும் கர்த்தரிவரே வல்லமை தேவன் நித்தியபிதா சமாதானப் பிரபு எனப்படுமே 2. இருளையகற்ற இயேசு பிறந்தார் இனிமை நிறைந்த இதயம் தந்தார் இவரே மீட்பர் இவரே கர்த்தர் இவராலன்றி இரட்சிப்பு இல்லை பாவம் போக்க பரமன் பிறந்தார் பாசத்தாலே பலியாய் மரித்தார் மரித்த இயேசு உயிர்த்து எழுந்தார் மீண்டும் என்னை அழைக்க வருவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvaelan Piranthaar Ennudan Irunthidavae Endhanin Paavamakartra Ennullae Uthitthuvittaar 1. Atimai Ennai Nokkip Paartthaar Thaazhndha Ennai Th Thookkivittaar Anpin Devan Avani Vanthaar Anpaal Ennai Anaitthukkontaar Avarin Naamam Athisayamae Aalosanai Tharum Karttharivarae Vallamai Devan Nitthiyapithaa Samaathaanap Pirapu Enappatumae 2. Irulaiyakartra Yesu Piranthaar Inimai Niraindha Idhayam Thanthaar Ivarae Meetpar Ivarae Kartthar Ivaraalanri Iratsippu Illai Paavam Pokka Paraman Piranthaar Paasatthaalae Paliyaay Maritthaar Marittha Yesu Uyirtthu Ezhunthaar Meentum Ennai Azhaikka Varuvaar