பாடல் #5043
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
🔤 Kanneerin Vazhigal Nanaiyum En Vizhigal
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ கடந்திட்ட பாதைகளை நினைத்திடும்போதெல்லாம் கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே சிறகுகளின் இறகுகளில் சுமந்து பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ ஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்து நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ காரிருள் என்னை சூழ்ந்தபோது பேரொளியாய் நின்றதை மறப்பேனோ தீங்கு நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னைக் காத்ததை மறப்பேனோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneerin Vazhigal Nanaiyum En Vizhigal Natanthitta Aazhigal Maranthidak Kootumo Katanthitta Paathaigalai Ninaitthitumpothellaam Kalangkaadha En Ullamum Kalangkituthae Kalangkaadha En Ullamum Kalangkituthae Sirakugalin Irakugalil Sumanthu Paranthu Ennaik Kaatthathai Marappaeno Oru Thakappanpola Tholinmael Sumanthu Natatthi Sendra Paathaigalai Marappaeno Kaarirul Ennai Soozhndhapothu Paeroliyaay Nindrathai Marappaeno Theengku Naalil Kootaara Maraivil Olitthennaik Kaatthathai Marappaeno