பாடல் #5216
கும்மியடி தமிழ்நாடு முழுவதும்
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
Scale: D Minor
Beat: 6/8
🎸 Chords Available
கும்மியடி தமிழ்நாடு முழுவதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி – 2 நம்மை பிடித்த பிசாசுகள் போயின இயேசுவை கண்டோம் கும்மியடி -2 இயேசுவை கண்டோம் கும்மியடி இயேசு ராஜாவை கண்டோம் கும்மியடி காத்து கருப்பு மாய மந்திரம் ஒழிஞ்சி போச்சுன்னு கும்மியடி – 2 சேத்துல கிடந்த நம்மையே தேவன் தூக்கி எடுத்தார் கும்மியடி – 2 அன்ன ஆகாரம் தந்த மன்னனுக்கு அடிச்சி கைதட்டி கும்மியடி – 2 முன்னனை மீதுற்ற சின்ன குமாரனை கண்ணம் கடிச்சி நீ கும்மியடி – 2 விண்ணக தேவன் மண்ணகம் வந்ததை மகிழ்ந்து புகழ்ந்து கும்மியடி – 2 விண்ணகம் வந்த உன்னத தேவனை உயர்த்திப் பாடி கும்மியடி – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm G C A Dm G Dm Dm Dm C Dm Dm G C A C Dm G Dm Dm G C A C Dm G Dm Dm G C A C Dm G Dm