பாடல் #34990
பார்வையில்லா குருடனாய்
🔤 Paarvaiyillaa Kurudanaay
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார்வையில்லா குருடனாய் பாரினில் வாழ்கிறேன் பாதை தெரியா அறியேன் நான் பாதையில் வதைகிறேன் - 2 1. ஒளி என்றும் என் வாழ்வில் வந்ததில்லை மகிழ்வு என்றும் என் வாழ்வில் கண்டதில்லை - 2 ஒளி என்று என் வாழ்வில் வந்திடுவாரோ மகிழ்வு வென்று என் வாழ்வில் தந்திடுவரோ - 2 2. அடக்கியே அமர செய்தார் பலர் அருகினில் அன்போடு அழைத்தார் இவர் - 2 அன்பரின் அழைப்பினை பெற்றேனே நான் அகமகிழ் ஆனந்தம் கொண்டேன் நான் - 2 3. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றார் நான் பார்வை அடையவேண்டும் என்றேன் - 2 நம்பிக்கை நலம் தரும் என்றே அவர் நாதன் கண்களை திறந்து விட்டார் - 2 காண்கிறேன் காண்கிறேன் காண்கிறேன் என் கண்களைத் திறந்தவரை (படைத்தவரை) காண்கிறேன் - 2 பார்வை எனக்கு தந்தவரை பாரினில் போற்றுவேன் பாதையாக நின்றவரை பார்முழுதும் சாற்றுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paarvaiyillaa Kurudanaay Paarinil Vaazhkiraen Paathai Theriyaa Ariyaen Naan Paathaiyil Vathaikiraen - 2 1. Oli Enrum En Vaazhvil Vandhathillai Makizhvu Enrum En Vaazhvil Kandathillai - 2 Oli Enru En Vaazhvil Vanthituvaaro Makizhvu Venru En Vaazhvil Thanthituvaro - 2 2. Adakkiyae Amara Seythaar Palar Arukinil Anpotu Azhaitthaar Ivar - 2 Anbarin Azhaippinai Perraenae Naan Agamakizh Aanandham Kontaen Naan - 2 3. Naan Unakku Enna Seyya Vaentum Enraar Naan Paarvai Ataiyavaentum Enraen - 2 Nampikkai Nalam Tharum Enrae Avar Naadhan Kankalai Thiranthu Vittaar - 2 Kaankiraen Kaankiraen Kaankiraen En Kankalaith Thirandhavarai (pataitthavarai) Kaankiraen - 2 Paarvai Enakku Thandhavarai Paarinil Porruvaen Paathaiyaaga Nindravarai Paarmuzhuthum Saarruvaen - 2