பாடல் #34987
இயேசுவை வாழ்த்துவோம்
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
இயேசுவை வாழ்த்துவோம் இன்ப நேசரை போற்றுவோம் -2 நம் வாழ்வின் பெலனாம் நல் தேவனை என்றென்றும் வாழ்த்துவோம் - 2 இயேசுவை வாழ்த்துவோம் 1. ஒளியாய் வந்தவர் அருளை பொழிந்தவர் - 2 பலியாய் ஈந்தவர் உயிராய் எழுந்தவர் - 2 2. நான் வழி என்றவர் நல்வழி நடத்துவார் - 2 நம்புவோம் நாதனை நல்குவார் ஜீவனை - 2 3. வருவேன் என்றவர் வருவார் வேகமே - 2 மறைவோம் மேகமே அடைவோம் ராஜ்ஜியமே - 2