பாடல் #3067
நீங்க மட்டும் இல்லாதிருந்தா
🎙 Evg. S. L. எட்வர்ட் ராஜ் • 💿 பரிகாரி
Scale: D
Beat: 4/4
நீங்க மட்டும் இல்லாதிருந்தா - என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் - உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா - மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2) இயேசய்யா உம் அன்பு போதுமே - என் நேசரே உம் கிருபை போதுமே (2) 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோது மூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2) அக்கினியில் நடந்த போது –2 (கடும்)என்னை மீட்டதும் கிருபையப்பா - (2) 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது ஆற்றியே அணைத்ததும் கிருபையப்பா (2) விக்கினங்கள் சூழ்ந்தபோது – 2(மரண) என்னை மீட்டதும் கிருபையப்பா - (2) 3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு இம்மட்டும் காத்ததும் கிருபையப்பா (2) வழி தப்பி அலைந்தபோது – (உந்தன்)-மீட்டு இரட்சித்ததும் கிருபையப்பா - (2)