பாடல் #8555
உம் பாதத்தைக் கண்ணீரால்
🔤 Um Paadhatthaik Kanneeraal
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: 60s 8 beat
⏱️ Tempo: 108 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.உம் பாதத்தைக் கண்ணீரால் கழுவும் பாக்கியத்தை நானும் பெற்றுக் கொண்டேன் என் கண்ணீர்கள் உமது சமூகத்தில் நிறையுதே கூடார மறைவில் காப்பீரே நீர் என் வெளிச்சம் தேவா நீர் என் இரட்சிப்பு தேவா நீர் என் கெம்பீரம் நீர் எந்தன் பெலனுமானீரே 2.உம் அன்பின் ஆழம் அகலம் உயரம் அறிவுக்கு எட்டாத ஞானம் பெற்றேன் என்னுள்ளம் உமது கிரியைக்காய் ஏங்குதே நீங்காத கிருபை தாங்கிடுதே- நீர் என் 3.உம் நாமத்தில் என்றும் சிறந்து விளங்க கிருபை மேல் நான் கிருபை பெற்றேன் ஆனந்த தைலத்தின் அபிஷேகம் இறங்கியே அற்புத வழியில் நடத்திடுதே- நீர் என் 4.புதிய எருசலேம் இறங்கி வந்திடும் கண்டு என்றும் துதித்திடுவேன் எந்தன் வாஞ்சை அன்று தீர்ந்திடும் என்றும் உந்தன் பாதம் தஞ்சமே- நீர் என் 5.மனசாட்சி கெட்டு மழுங்கிடும் மாந்தரின் கூட்டங்கள் பல பெருகிடுதே மனசாட்சியிலும் நீர் பெரியவர் இயேசுவே! மனிதர் உணரச் செய்திடுமே- நீர் என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.um Paadhatthaik Kanneeraal Kazhuvum Paakkiyatthai Naanum Perruk Kontaen En Kanneerkal Umathu Samoogatthil Niraiyuthae Kootaara Maraivil Kaappeerae Neer En Veliccham Thaevaa Neer En Iratsippu Thaevaa Neer En Kempeeram Neer Endhan Pelanumaaneerae 2.um Anpin Aazham Agalam Uyaram Arivukku Ettaadha Njaanam Perraen Ennullam Umathu Kiriyaikkaay Aengkuthae Neengkaadha Kirupai Thaangkituthae- Neer En 3.um Naamatthil Enrum Siranthu Vilangga Kirupai Mael Naan Kirupai Perraen Aanandha Thailatthin Apishaegam Irangkiyae Arpudha Vazhiyil Natatthituthae- Neer En 4.puthiya Erusalaem Irangki Vanthitum Kantu Enrum Thuthitthituvaen Endhan Vaanjsai Anru Theernthitum Enrum Undhan Paadham Thanjjamae- Neer En 5.manasaatsi Kettu Mazhungkitum Maandharin Koottanggal Pala Perukituthae Manasaatsiyilum Neer Periyavar Yesuvae! Manidhar Unarach Seythitumae- Neer En