பாடல் #8557
கூப்பிடும் குரலைக் கேட்டிடும்
🔤 Kooppitum Kuralaik Kaettitum
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: Swing Waltz
⏱️ Tempo: 155 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கூப்பிடும் குரலைக் கேட்டிடும் தேவன் கூவியழைக்கும் வேளையிது குரல் தனைக் கேட்பாய் மனம் தனை தருவாய் உன்னையும் நேசிப்பாரே- கூப்பிடும் 1.தேவ மகிமையைக் கண்டிடவே தேவ சாயலைப் பெற்றிடவே இயேசு கிறிஸ்து அழைக்கின்றார் கிறிஸ்துவின் பாதம் நீ சரணடைவாய் 2.இயேசுவின் கண்கள் தேடிடுதே இன்னல்கள் நீங்க நாடிடுதே பல்லாயிரம் ஆசீர் உந்தனுக்கே நல்லவர் இயேசு நல்கிடுவார்- கூப்பிடும் 3.மாய அன்பில் நீ மாண்டிடாதே மனித அன்பில் நீ மயங்கிடாதே மகிபன் இயேசுவின் மாசற்ற அன்பை மகிழ்வோடு இன்று நீ பெற்றுக் கொள்வாய் 4.உன்னத தேவன் உன்னோடே உந்தனை நல்வழி நடத்திடுவார் உயர்ந்த பர்வதம் சீயோனிலே சிறந்து விளங்க நிறுத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kooppitum Kuralaik Kaettitum Devan Kooviyazhaikkum Vaelaiyithu Kural Thanaik Kaetpaay Manam Thanai Tharuvaay Unnaiyum Naesippaarae- Kooppitum 1.thaeva Makimaiyaik Kantidavae Thaeva Saayalaip Perridavae Yesu Kiristhu Azhaikkinraar Kiristhuvin Paadham Nee Saranataivaay 2.yesuvin Kankal Thaetituthae Innalkal Neengga Naatituthae Pallaayiram Aaseer Undhanukkae Nallavar Yesu Nalkituvaar- Kooppitum 3.maaya Anpil Nee Maantitaathae Manidha Anpil Nee Mayangkitaathae Makiban Yesuvin Maasartra Anpai Makizhvotu Inru Nee Perruk Kolvaay 4.unnatha Devan Unnotae Undhanai Nalvazhi Natatthituvaar Uyarndha Parvatham Seeyonilae Siranthu Vilangga Nirutthituvaar