பாடல் #1815
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு
🔤 Oru Kurtram Kooda Seyyaadha Orae Oru
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் -2 தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் -2 -ஒரு குற்றம் கூட எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம்-2 உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம்-2 பச்சத்தண்ணிய பழரசமாக்கி பரவசப்படுத்திய தெய்வம்-2 மேல் ஜாதி கீழ் ஜாதி வித்தியாசம் பாக்காத ஒரே ஒரு தெய்வம் -2 -ஒரு குற்றம் கூட பாவம் இல்லாத மனிதரின் இதயத்தில் வாழும் சுத்த தெய்வம்-2 பாவத்தை மன்னிக்கும் அதிகாரமுடைய ஒரே ஒரு தெய்வம்-2 இலவசமாக நோயை போக்கிப் பேயை ஓட்டும் தெய்வம்-2 கொதித்தெழுந்த கடலைக்கூட அடக்கி நிறுத்திய தெய்வம்-2 -ஒரு குற்றம் கூட செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம்-2 ஆதரவில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்-2 கடலின் மீது தரையைப்போல நடந்த அதிசய தெய்வம்-2 பூட்டப்பட்ட வீட்டிற்குள்ளே கடந்து வந்த தெய்வம்-2-ஒரு குற்றம் கூட சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட மன்னித்த பெரிய தெய்வம்-2 மரித்த பின்பும் உயிரோடு எழுந்த ஒரே ஒரு தெய்வம்-2 முப்பத்துமூன்று கோடிகளுக்குள்ளே இப்படி இல்லை ஒரு தெய்வம்-2 கையெடுத்து கும்பிடுவதற்கு பாத்திரமான தெய்வம்-2-ஒரு குற்றம் கூட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Kurtram Kooda Seyyaadha Orae Oru Theyvam Yesu Mattum Thaan -2 Than Ethirigalukkaay Uyirai Kotuttha Orae Oru Theyvam Yesu Mattum Thaan -2 -oru Kurtram Kooda Engkum Niraindha Ellaam Arindha Ellaam Valla Theyvam-2 Ulakatthaip Pataitthavar Vanakkatthukkuriyavar Orae Oru Theyvam-2 Pacchatthanniya Pazharasamaakki Paravasappatutthiya Theyvam-2 Mael Jaathi Keezh Jaathi Vitthiyaasam Paakkaadha Orae Oru Theyvam -2 -oru Kurtram Kooda Paavam Illaadha Manidharin Idhayatthil Vaazhum Suttha Theyvam-2 Paavatthai Mannikkum Athikaaramutaiya Orae Oru Theyvam-2 Ilavasamaaga Noyai Pokkip Paeyai Ottum Theyvam-2 Kothitthezhundha Katalaikkooda Adakki Nirutthiya Theyvam-2 -oru Kurtram Kooda Setthup Pona Udalukkullae Uyirai Vaittha Theyvam-2 Aadharavillaa Anaathaigatku Ataikkalamaana Theyvam-2 Katalin Meethu Tharaiyaippola Natandha Athisaya Theyvam-2 Poottappatta Veettirkullae Katanthu Vandha Theyvam-2-oru Kurtram Kooda Siluvaiyil Thannai Araindhavaraikkooda Mannittha Periya Theyvam-2 Marittha Pinpum Uyirotu Ezhundha Orae Oru Theyvam-2 Muppatthumoonru Kotigalukkullae Ippati Illai Oru Theyvam-2 Kaiyetutthu Kumpituvatharku Paatthiramaana Theyvam-2-oru Kurtram Kooda