பாடல் #1589
என் மீட்பர் உயிரோடிருக்கையில்
🔤 En Meetpar Uyirotirukkaiyil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறையுண்டு? நீ சொல், மனமே என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர், மித்திரனே சுகபத்திர மருளும் பாபமோ, மரணமோ, நரகமோ பேயோ, பயந்து நடுங்கிட ஜெயஞ்சிறந்தோர், சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழாய் ஆசிசெய்திடுவார், அருள்மிக அளிப்பார் அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார் மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார் கடைசிமட்டுங் கைவிடாதிருப்பார் பவமன்னிப் பளிப்பார், பாக்கியங் கொடுப்பார் பரம பதவியினுள் என்றனை எடுப்பார் போனது போகட்டும், புவிவசை பேசட்டும் பொல்லான் அம்புக ளெய்திடட்டும் ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும் அன்புமிகும் பேரின்ப மெனக்கருள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Meetpar Uyirotirukkaiyilae Enak Kenna Kuraiyuntu? Nee Sol, Manamae Ennuyir Meetkavae Thannuyir Kotutthor Ennotirukkavae Ezhunthirunthor Vinnula Kuyarnthor, Unnathanjsiranthor, Mitthiranae Sugapatthira Marulum Paabamo, Maranamo, Narakamo Paeyo, Payanthu Natungkida Jeyanjsiranthor, Saabamae Theertthor Sarkurunaadhan Sanjjalaminiyaen Nenjjamae Makizhaay Aasiseythituvaar, Arulmiga Alippaar Ambaran Thanilenakkaay Jepippaar Mosamae Maraippaar, Munnamae Natappaar Motsavazhi Sathyam Vaasal Uyirenum Kavalaigal Theerppaar, Kanneer Thutaippaar Kataisimattung Kaivitaathiruppaar Pavamannip Palippaar, Paakkiyang Kotuppaar Parama Pathaviyinul Endranai Etuppaar Ponathu Pogattum, Puvivasai Paesattum Pollaan Ampuga Leythidattum Aanathu Aagattum, Arulmazhai Peythitum Anpumikum Paerinba Menakkarul