பாடல் #8064
சங்கீதம் நான் பாடவந்தேன்
🔤 Sangkeedham Naan Paadavanthaen
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சங்கீதம் நான் பாடவந்தேன் - நெஞ்சில் சந்தோஷம் என் ஏசு தந்தார் என் பாவ பாரங்கள் தீர்த்தார் - இன்று என் வாழ்வில் பேரின்பம் ஈந்தார். 1. இரத்தாம்பரம் போன்ற சிவப்பான எந்தன் இதயத்தின் பாவங்கள் அவர் நீக்கியே வெண்பஞ்சை போலாக்கி என் நெஞ்சை சீராக்கி எண்ணில்லா ஆனந்தம் எனக்கீந்தாரே 2. கார்மேகம் போலெந்தன் பாவங்கள் யாவும் கடலாழம் அவர் தள்ளி எனை மன்னித்தார் என் சாப ரோகங்கள் தன் மீது சுமந்தே என் நெஞ்சில் பேரின்பம் அவர் தந்தாரே 3. கல்லான என் நெஞ்சை சதையாக மாற்றி நல்லாவி வரம் யாவும் அவர் தந்ததால் என் ஆவி ஆத்துமா சரீரத்தை அவர்க்கே என்றென்றும் பலியாக படைத்திடுவேன் 4. எனை மீட்ட ஏசுவின் இணையில்லா அன்பை தினம்பாடி அவர் சித்தம் போல் நடப்பேன் மணவாளன் மேகத்தில் வருகின்ற நாளில் மகிழ்வோடு அவரோடு பறந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sangkeedham Naan Paadavanthaen - Nenjsil Santhosham En Aesu Thanthaar En Paava Paaranggal Theertthaar - Inru En Vaazhvil Paerinbam Eenthaar. 1. Ratthaambaram Pondra Sivappaana Endhan Idhayatthin Paavanggal Avar Neekkiyae Venpanjsai Polaakki En Nenjsai Seeraakki Ennillaa Aanandham Enakkeenthaarae 2. Kaarmaegam Polendhan Paavanggal Yaavum Katalaazham Avar Thalli Enai Mannitthaar En Saaba Roganggal Than Meethu Sumanthae En Nenjsil Paerinbam Avar Thanthaarae 3. Kallaana En Nenjsai Sathaiyaaga Maarri Nallaavi Varam Yaavum Avar Thandhathaal En Aavi Aatthumaa Sareeratthai Avarkkae Enrenrum Paliyaaga Pataitthituvaen 4. Enai Meetta Aesuvin Inaiyillaa Anpai Thinampaati Avar Sittham Pol Natappaen Manavaalan Maegatthil Varukindra Naalil Makizhvotu Avarotu Paranthituvaen