பாடல் #8630
சிலுவை மரத்தில் தொங்குகிறார்
🔤 Siluvai Maratthil Thongkukiraar
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Em
🥁 Beat: Piano Bld
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை மரத்தில் தொங்குகிறார் மனித மீட்புக்கு சீயோன் நேசர் 1.சிலுவையின் வேதனை பெருகிட்டாலும் நிந்தை அவமானம் சூழ்ந்திட்டாலும் மாளும் மாந்தரின் மீட்பை உணர்ந்து பிதாவே! இவர்களை மன்னியும் என்றார் மாட்சிமை மகுட இரட்சகர் இயேசு- சிலுவை 2.ஞான இதயம் வேத நிறைவு அறிவு களஞ்சியம் அன்பின் ஆலயம் கள்ளன் உள்ளம் உடைந்ததைக் கண்டு இன்றைக்கு நீ என்னோடே கூட பரதீசிலிருப்பாய் என்றார் இயேசு- சிலுவை 3.பாசம் கொண்டவர் பரலோக நாதர் பற்றிடும் பண்பின் வசனம் மொழிந்தார் ஸ்திரியே! அதோ உன் மகன் என்றார் சீஷனை நோக்கி அதோ உன் தாய் என்றார் இயேசு மெய் சிலிர்க்க- சிலுவை 4.இன்ப இயேசு உரிமை கொண்டு இன்னல் நீக்கும் ஒளி முகம் காண என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவீட்டீர் என்று கூப்பிட்டு பிதாவோடு இணைந்திட்டார்- சிலுவை 5.கன் மலை சிகரம் இயேசுவே சுரந்து வந்திடும் ஜீவ ஊற்று சிலுவை மரத்தில் தொங்குகிறார் தாகமாயிருக்கிறேன் என்றவரே நம் தாகம் தீர்ககும் ஜீவ நதி- சிலுவை 6.முற்றிலும் அழகு பூரண ரூபம் கற்றவர் கண்டிடும் கரைந்த உள்ளம் கருத்து நிறைந்த சீயோன் சிகரம் முடிந்தது என்றார் வெற்றி தொனியில் முடிவில்லா மகிமை மாளிகை கண்டார்- சிலுவை 7.இன்றும் என்றும் மாறாதவர் இனிய நாமத்தில் திகழ்ந்தவர் பிதாவே! உம்முடைய கைகளில் என் ஆவியே ஒப்புவிக்கிறேன் ஜீவனில் ஜீவன் கண்டு மகிழ்வேன்- சிலுவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Maratthil Thongkukiraar Manidha Meetpukku Seeyon Naesar 1.siluvaiyin Vaedhanai Perukittaalum Ninthai Avamaanam Soozhnthittaalum Maalum Maandharin Meetpai Unarnthu Pithaavae! Ivarkalai Manniyum Enraar Maatsimai Makuda Iratsakar Yesu- Siluvai 2.njaana Idhayam Vaedha Niraivu Arivu Kalanjsiyam Anpin Aalayam Kallan Ullam Utaindhathaik Kantu Inraikku Nee Ennotae Kooda Paratheesiliruppaay Enraar Yesu- Siluvai 3.paasam Kondavar Paraloga Naadhar Parritum Panpin Vasanam Mozhinthaar Sthiriyae! Atho Un Makan Enraar Seeshanai Nokki Atho Un Thaay Enraar Yesu Mey Silirkka- Siluvai 4.inba Yesu Urimai Kontu Innal Neekkum Oli Mugam Kaana En Devanae! En Devanae! Aen Ennaik Kaiveetteer Enru Kooppittu Pithaavotu Inainthittaar- Siluvai 5.kan Malai Sigaram Yesuvae Suranthu Vanthitum Jeeva Oorru Siluvai Maratthil Thongkukiraar Thaagamaayirukkiraen Endravarae Nam Thaagam Theerkakum Jeeva Nathi- Siluvai 6.murrilum Azhaku Poorana Roobam Kartravar Kantitum Karaindha Ullam Karutthu Niraindha Seeyon Sigaram Mutindhathu Enraar Verri Thoniyil Mutivillaa Makimai Maalikai Kantaar- Siluvai 7.inrum Enrum Maaraadhavar Iniya Naamatthil Thigazhndhavar Pithaavae! Ummutaiya Kaigalil En Aaviyae Oppuvikkiraen Jeevanil Jeevan Kantu Makizhvaen- Siluvai