பாடல் #70
சிறு வயதில் இருந்து
🔤 Siru Vayathil Irunthu
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிறு வயதில் இருந்து சுமந்தவரே, யாரிடமும் கொடுக்காமல் வளர்த்தவரே -(2) உங்க தோளில் இருந்த சுகமும், உங்க முத்தத்தில் இருந்த அன்பும், மறக்க முடியல, அத விட்டு வாழ தெரியல -(2) உங்க அன்பு பெருசு, கிருபையும் பெருசு ஆற்றி தேற்றி அரவணைக்குற, நீங்க மட்டும் தான் பெருசு -(2) அரவணைப்பவரே உமக்கு ஆராதனை, ஆசிர்வதிப்பவரே உமக்கு ஆராதனை -(2) 1) நீங்க தூக்கும் போது, என்ன கொஞ்சும் போது பேரானந்தம் கொள்கிறேன் -(2) உங்க கைகளில் இருக்கும் போது. உலகை மறக்கிறேன், உங்க நிழலில் நடக்கும் போது, என்னையே மறக்கிறேன்; இயேசையா இயேசையா, நீங்க மட்டும் போதுமையா -(2) ...(உங்க) 2) நான் அழும் போது, இல்ல விழும் போது, உம் கரம் என்னை தேடி வருகுதே -(2) நீர் என்னை பிடிக்கும் போது, பயத்தை மறக்குறேன், உம் சமுகம் இருக்கும் போது, குறைவை மறக்குறேன்; இயேசையா இயேசையா, நீங்க மட்டும் போதுமையா -(2) ...(உங்க)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siru Vayathil Irunthu Sumandhavarae, Yaaridamum Kotukkaamal Valartthavarae -(2) Ungga Tholil Irundha Sugamum, Ungga Mutthatthil Irundha Anpum, Marakka Mutiyala, Adha Vittu Vaazha Theriyala -(2) Ungga Anpu Perusu, Kirupaiyum Perusu Aarri Thaerri Aravanaikkura, Neengga Mattum Thaan Perusu -(2) Aravanaippavarae Umakku Aaraadhanai, Aasirvathippavarae Umakku Aaraadhanai -(2) 1) Neengga Thookkum Pothu, Enna Konjsum Pothu Paeraanandham Kolkiraen -(2) Ungga Kaigalil Irukkum Pothu. Ulakai Marakkiraen, Ungga Nizhalil Natakkum Pothu, Ennaiyae Marakkiraen; Yesaiyaa Yesaiyaa, Neengga Mattum Pothumaiyaa -(2) ...(ungga) 2) Naan Azhum Pothu, Illa Vizhum Pothu, Um Karam Ennai Thaeti Varukuthae -(2) Neer Ennai Pitikkum Pothu, Payatthai Marakkuraen, Um Samugam Irukkum Pothu, Kuraivai Marakkuraen; Yesaiyaa Yesaiyaa, Neengga Mattum Pothumaiyaa -(2) ...(ungga)