பாடல் #6254
இது அதிசயமே எனக்கானந்தமே
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
Scale: B Minor
Beat: 2/4
🎸 Chords Available
இது அதிசயமே எனக்கானந்தமே இன்ப பரலோகம் துறந்தெனக்காய் இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார் விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில் என்னையும் எண்ணிலே தம் மனதில் தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து தயாபரனாய்த் தோன்றினார் – தேவ மானிடர் மன இருள் நீக்கிடும் மெய் மா பிரபையோடிலங்கும் மகிபன் மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத் தந்தாரே இயேசுவையே -எந்தன் சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார் நன்றியோடே நானும் பாடிடுவேன் தற்பரன் இயேசுவையே எந்தன் பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டே பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ எங்குமோர் ஸ்தலமுமில்லை – பூவில் சாந்தமும் தாழ்மையும் நீதியுமே சிறப்புடன் விளங்கிடுதே அவரில் இந்நுகமே எனக்கெந்நாளுமே சொந்த மென்றேற்றிடுவேன் என்றும்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm D Bm A Bm A G Bm Bm G A Bm Em F#m Bm Bm G Em F#7 Bm Bm G A Bm Em F#m Bm Bm G Em F#7 Bm Bm G A Bm Em F#m Bm Bm G Em F#7 Bm Bm G A Bm Em F#m Bm Bm G Em F#7 Bm Bm G A Bm Em F#m Bm Bm G Em F#7 Bm