பாடல் #682
இன்ப கீதம் துன்ப நேரம்
🔤 Inba Keedham Thunba Naeram
🎙 Sis. சாராள் நவரோஜி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப கீதம் துன்ப நேரம் ஈந்தீரே என் இயேசுவே கொல்கொதா பாதை சிலுவை சுமந்தே கர்த்தாவே உம்மண்டை வந்தேன் 1. பெருவெள்ளத்தின் புகலிடம் நீரே பெரும் கன்மலை நிழலே வீசிடும் கொண்டல் காற்றுக்கு ஒதுக்கே வற்றாத நீருற்றும் நீரே 2. ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில் ஊக்கமுடன் என்னை தேடி கண்டு உணர்த்தி கைத்தாங்கி நடத்தி கண்ணின் மணிப் போல காத்தீர் 3. துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தும் கஷ்டம் வராது என்னை காத்தீர் மந்தையின் மேய்ப்பன் தாவீதின் தேவன் எந்தை என் தந்தையும் நீரே 4. போராட்டமான போன வாழ்நாளில் நீரோட்டம் மோதும் இன்னலில் முற்றும் முடிய வெற்றி அளித்தீர் குற்றம் குறை நீக்கி காத்தீர் 5. உந்தன் சரீர பெலவீன நேரம் எந்தன் கிருபையே போதும் என்று உரைத்து என்னை அணைத்து எத்தனையோ நன்மை செய்தீர் 6. கல்வாரி பாதை தோல்வி இல்லையே கர்த்தாவே முன்னோடி நீரே உம் பின் நடந்தே உம்மை தொடர்ந்தே உன்னத வீட்டை அடைவேன் 7. அழைத்தவரே உண்மையுள்ளவரே அப்படியே ஜெயம் ஈவார் இயேசுவே உம்மால் ஜெயம் அருளும் எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Keedham Thunba Naeram Eentheerae En Yesuvae Kolkothaa Paathai Siluvai Sumanthae Kartthaavae Ummantai Vanthaen 1. Peruvellatthin Pugalidam Neerae Perum Kanmalai Nizhalae Veesitum Kondal Kaarrukku Othukkae Varraadha Neerurrum Neerae 2. Oolaiyitum Or Paazhum Nilatthil Ookkamudan Ennai Thaeti Kantu Unartthi Kaitthaangki Natatthi Kannin Manip Pola Kaattheer 3. Thushta Mirugam Ennai Ethirtthum Kashtam Varaathu Ennai Kaattheer Manthaiyin Maeyppan Thaaveethin Devan Enthai En Thanthaiyum Neerae 4. Poraattamaana Pona Vaazhnaalil Neerottam Mothum Innalil Murrum Mutiya Verri Alittheer Kurtram Kurai Neekki Kaattheer 5. Undhan Sareera Pelaveena Naeram Endhan Kirupaiyae Pothum Enru Uraitthu Ennai Anaitthu Etthanaiyo Nanmai Seytheer 6. Kalvaari Paathai Tholvi Illaiyae Kartthaavae Munnoti Neerae Um Pin Natanthae Ummai Thodarnthae Unnatha Veettai Ataivaen 7. Azhaitthavarae Unmaiyullavarae Appatiyae Jeyam Eevaar Yesuvae Ummaal Jeyam Arulum Enggal Pithaavukku Sthotthiram