பாடல் #5434
துதி உமக்கே இயேசு நாதா
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: E Major
Beat: 2/4
🎸 Chords Available
துதி உமக்கே இயேசு நாதா வாழ்த்திடுவோம் உம்மையே நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே எண்ணியே துதித்திடுவோம் 1.ஆதி அந்தமில்லா அனாதி தேவனே அடைக்கலமானீர் எமக்கு நீரே மாறா விசுவாசத்தை எமக்குத் தந்தீரே எண்ணியே துதித்திடுவோம்- துதி 2.கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை காருண்யத்தாலே காத்தீரே வல்ல தேவனே உம் வாக்குகளையே எண்ணியே துதித்திடுவோம்- துதி 3.தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர் தந்தை போல் எம்மை சுமந்தீரே ஜீவனைத் தந்த உம் அன்பினையே எண்ணியே துதித்திடுவோம்- துதி 4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்து ஜீவனை வைத்தே துதித்திடவே நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே எண்ணியே துதித்திடுவோம்- துதி 5.உன்னதர் உந்தன் மகிமையைக் காண சீயோனை எமக்குக் காட்டினீரே இயேசுவே உந்தன் வருகையின் நாளை எண்ணியே துதித்திடுவோம்- துதி
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A B E E A F#m B7 E E A B E A F#m B7 E E A B E A F#m B7 E E A B E A F#m B7 E E A B E A F#m B7 E