பாடல் #5330
சேனைகளின் தேவனே உமது வாசஸ்தலம்
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
Scale: E Major
Beat: 4/4
🎸 Chords Available
சேனைகளின் தேவனே உமது வாசஸ்தலம் எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமாய் இருக்கிறது எங்கள் சேனைகளின் தேவனே (2) பூமி நோக்கி நான் பார்த்தேன் உம்மைப்போல ஒரு தெய்வம் பூமியிலே கண்டதில்லை (2) வானம் கொள்ளாதவர் – இயேசு பூமி கொள்ளாதவர் (2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று வாழ்நாளெல்லாம் நான் பாடுவேன் ஜோதிகளின் தேவனே நன்மையான ஈவுகளை நாள்தோறும் தருபவரே – (2) எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே (2) தடைகளை உடைத்து கட்டுகளை அறுத்து அனுதினம் என்னைக் காப்பவர் பட்சிக்கிற அக்கினியே தீமைகளைப் பாராத சுத்த தெய்வம் நீரய்யா- (2) வானம் சிங்காசனம் பூமி பாதபடி (2) அகிலமே போற்றுது போற்றுது போற்றுது உன்னத தேவனே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E E C#m E E C#m B E C#m E B F# B E E E E B A E C#m E B F# B E E E B A E C#m E B F# B E E E B A E