பாடல் #2689
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
🔤 Thaen Inimaiyilum Yesuvin Naamam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே - அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய், (திருச்சபையானோரே) தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே - பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார் கண்டுனர் நீமனமே 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம் - பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி மனமே 3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும் - என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே 4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் - நீயும் அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார் ஆசை கொள் நீ மனமே. 5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம் - அதைப் பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaen Inimaiyilum Yesuvin Naamam Thivviya Mathuramaamae - Athaith Thaetiyae Naati Otiyae Varuvaay, (thirucchapaiyaanaeாrae) Thinamum Nee Manamae 1. Kaasinidhanilae Naesamathaagak Kashtatthai Uttharitthae - Paavak Kasatathai Arutthuch Saabatthaith Tholaitthaar Kantunar Neemanamae 2. Paaviyai Meetkath Thaaviyae Uyiraith Thaamae Eendhavaraam - Pinnum Naemiyaam Karunai Nilaivaramuntu Nidham Thuthi Manamae 3. Kaalaiyil Panipol Maayamaay Ulakam Upaayamaay Neengkivitum - Enrum Karttharin Paadham Nicchayam Nampu Karutthaay Nee Manamae 4. Thunbatthil Inbam Thollaiyil Nalla Thunaivaraam Naesaridam - Neeyum Anbathaaych Saertthaal Anaitthunaik Kaappaar Aasai Kol Nee Manamae. 5. Poologatthaarum Maelogatthaarum Pugazhnthu Porru Naamam - Athaip Poontukontaalthaan Ponnakar Vaazhvil Pukuvaay Nee Manamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E F#m G#m C#m
B B7 E
G#m E G#m
E G#m B
E F#m G#m C#m
B B7 E
G#m E G#m
E G#m B
E F#m G#m C#m
B B7 E
G#m E G#m
E G#m B
E F#m G#m C#m
B B7 E
G#m E G#m
E G#m B
E F#m G#m C#m
B B7 E
G#m E G#m
E G#m B
E F#m G#m C#m
B B7 E
G#m E G#m
E G#m B