பாடல் #43155
வாலிபனே இது உனக்கு நல்ல காலம்
🎙 Bro. A. ஸ்டாலின் • 💿 வழிகாட்டுவார்
Scale: D Min
Beat: 2/4
வாலிபனே இது உனக்கு நல்ல காலம் வல்லமையாய் கிரியை செய்யும் நேரம் - 2 1. கர்த்தருக்காக நீ எழும்பிடும் நேரம் காவலில் உள்ளோரை விடுவிக்கும் காலம் - 2 காத்திருந்து பெலன் அடைந்தாலே -2 கர்த்தருக்காய் நீ எழும்பிடலாமே கர்த்தருக்காய் நீ கலக்கிடலாமே 2. பாழாய் கிடக்கும் ஸ்தலங்கள் பலவே பழுது பார்க்க ஆட்கள் இல்லையே - 2 பரிசுத்த தேவனின் துணை கொண்டு நீயும் - 2 பாழானதை கட்டிடலாமே பாரதத்தை நீ கலக்கிடலாமே 3. எகுவைப் போல எழும்பிடுவாயே ஏசபேல்களை அழித்திடுவாயே - 2 கர்த்தரின் நாமத்தை எடுத்து நீ செல்ல(சொல்ல) - 2 கடைசி காலத்தில் ஆயத்தம் தானா - 2