பாடல் #118
அன்பின் சமூகமே
🔤 Anpin Samoogamae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் சமூகமே இறை அருளின் திருக்கூட்டமே பேதமில்லாதே கூடுவோம் - அருள் வேதத்தின் வாக்கிலே வாழுவோம் அல்லேலூயா பாடி நாம் ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா பாடி நாம் மகிழ்ந்திடுவோம் தந்தை மகன் தூய ஆவியென இறைவன் உறவுடன் வாழ்கின்றார் சிந்தையும் செயலும் ஒருங்கிணைந்த திரித்துவ சமூகத்தைப் போற்றிடுவோம் - 2 அனைவரும் குடும்பமாய் கூடிடுவோம் ஒருள்ளம் ஒருமனம் கொண்டு வாழ்வோம் தேவையில் உடமையைப் பகிர்ந்திடுவோம் சேவையில் தினம் நம்மைத் தந்திடுவோம் - 2 எல்லோர்க்கும் நண்பராய் ஆகிடுவோம் பொல்லார்க்கும் நன்மையே செய்திடுவோம் மன்னித்து மறந்தே வாழ்ந்திடுவோம் மங்காத அன்பிலே மிளிர்ந்திடுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Samoogamae Irai Arulin Thirukkoottamae Paedhamillaathae Kootuvom - Arul Vaedhatthin Vaakkilae Vaazhuvom Allaelooyaa Paati Naam Aarpparippom Allaelooyaa Paati Naam Makizhnthituvom Thanthai Makan Thooya Aaviyena Iraivan Uravudan Vaazhkinraar Sinthaiyum Seyalum Orungkinaindha Thiritthuva Samoogatthaip Porrituvom - 2 Anaivarum Kutumbamaay Kootituvom Orullam Orumanam Kontu Vaazhvom Thaevaiyil Udamaiyaip Pakirnthituvom Saevaiyil Thinam Nammaith Thanthituvom - 2 Ellorkkum Nanparaay Aakituvom Pollaarkkum Nanmaiyae Seythituvom Mannitthu Maranthae Vaazhnthituvom Mangkaadha Anpilae Milirnthituvom - 2