பாடல் #6614
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
🔤 Ekkaala Sattham Vaanil Thonitthidavae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F# Major
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே எம் இயேசு மாராஜனே வந்திடுவார் 1. அந்த நாள் மிக சமீபமே சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே தேவ எக்காளம் வானில் முழங்க தேவாதி தேவனை சந்திப்போமே 2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம் கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் பலன்கள் யாவையும் அவரே அளிப்பார் பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் 3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம் விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் கண்ணீர் கவலை அங்கே இல்லை கர்த்தர் தாமே வெளிச்சமாவார் 4. வானமும் பூமியும் மாறிடினும் வல்லவர் வாக்குதாம் மாறிடாதே தேவ தூதர் பாடல் தொனிக்க தேவன் அவரையே தரிசிப்போமே 5. கள்ளர்கள் பரவி அங்குமிங்கும் கர்த்தரின் வார்த்தையை புரட்டுகின்றார் கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும் கருத்துடன் நாம் விழிந்திருப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekkaala Sattham Vaanil Thonitthidavae Em Yesu Maaraajanae Vanthituvaar 1. Andha Naal Miga Sameebamae Suttharkal Yaavarum Saernthidavae Thaeva Ekkaalam Vaanil Muzhangga Thaevaathi Devanai Santhippomae 2. Karttharin Vaelaiyai Naam Ariyom Karttharin Sitthamae Seythituvom Palankal Yaavaiyum Avarae Alippaar Paramanotenrum Vaazhnthituvom 3. Kannimai Naeratthil Maarituvom Vinnilae Yaavarum Saernthituvom Kanneer Kavalai Angkae Illai Kartthar Thaamae Velicchamaavaar 4. Vaanamum Poomiyum Maaritinum Vallavar Vaakkuthaam Maaritaathae Thaeva Thoodhar Paadal Thonikka Devan Avaraiyae Tharisippomae 5. Kallarkal Paravi Angkumingkum Karttharin Vaartthaiyai Purattukinraar Karttharae Vaarum Vaanjsaiyai Theerum Karutthudan Naam Vizhinthiruppom