பாடல் #180
இயேசு பாலன் இன்று
🔤 Yesu Paalan Inru
🎙 Pr. சாலொமோன் செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பாலன் இன்று பிறந்தாரே நாம் அவரை துதித்திடுவோம் 1. வானத்தில் பேரொளி வீசிடவே தூதர்கள் கூட்டம் பாடிடவே பெத்லகேம் ஊரில் பாலகனாய் பிறந்த இயேசுவை ஸ்தோத்தரிப்போம் 2. ஆடுகள் மேய்த்த மேய்ப்பர்கட்கு ஆண்டவர் தரிசனம் அளித்தாரே வானவர் சேனை சொல்லியபடியே வாஞ்சையோடு சென்றனரே 3. இயேசு பாலனை முன்னணையில் மேய்ப்பர்கள் கண்டு மகிழ்ந்தனர் அவரின் முன்பில் பணிந்துமே ஆண்டவரில் மகிழ்ந்தனரே 4. வானத்தில் விண்மீன் தோன்றியே ஞானியரின் முன் செல்லவே காணிக்கைகளை படைத்துமே கர்த்தர் இயேசுவைப் பணிந்தனரே 5. பெத்லகேம் தோன்றிய இயேசு பாலன் பாரில் இரட்சகர் ஆனாரே அவரின் வழியாய் நித்யராஜ்ஜியம் அடைய இன்றே வருவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Paalan Inru Piranthaarae Naam Avarai Thuthitthituvom 1. Vaanatthil Paeroli Veesidavae Thoodharkal Koottam Paatidavae Pethlakaem Ooril Paalakanaay Pirandha Yesuvai Sthottharippom 2. Aatugal Maeyttha Maeypparkatku Aandavar Tharisanam Alitthaarae Vaanavar Saenai Solliyapatiyae Vaanjsaiyotu Sendranarae 3. Yesu Paalanai Munnanaiyil Maeypparkal Kantu Makizhndhanar Avarin Munpil Paninthumae Aandavaril Makizhndhanarae 4. Vaanatthil Vinmeen Thonriyae Njaaniyarin Mun Sellavae Kaanikkaigalai Pataitthumae Kartthar Yesuvaip Panindhanarae 5. Pethlakaem Thonriya Yesu Paalan Paaril Iratsakar Aanaarae Avarin Vazhiyaay Nithyaraajjiyam Ataiya Inrae Varuveerae