பாடல் #976
இராஜனே உம் வருகைக்கான
🔤 Iraajanae Um Varukaikkaana
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜனே உம் வருகைக்கான காலக்குறிகள் தெரிகின்றன இயேசுவே! நீர் வரும்போது விழித்திருந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் வாரும் இயேசு வாரும் வாரும் விரைந்து வாரும் மரித்து உயிர்த்தவர் இன்று வருகின்றார் என்ற நினைவுடன் தாபரிப்போம்! மங்கள நாள் விடியும் காலை ஏங்கும் கன்னியாய் காத்திருப்போம்! செல்வம் எங்கோ, உள்ளம் அங்கே என்ற உண்மையை மனதில் கொள்வோமே! விண்ணுக்குரிய மகிமை வாழ்வை மண்ணிலே நாம் நடத்தி முடிப்போம்! மயக்கும் உலகம், அமிழ்த்தும் மோகம் எதிரியவனின் பொறிகள் என்போம்! விழித்து எதிர்த்தும் விலகிவாழ்ந்தும் வஞ்சகன் மேல் வெற்றி பெறுவோம்! தூய உள்ளம் தூய சிந்தை காலமெல்லாம் அணிந்திருப்போம்! ஜோதிமங்காமல் வாழ்ந்திருந்து தேவ இராஜியம் பெருக உழைப்போம்! உண்மையோடு கடமை முடித்தோர் இன்றும் என்றும் உயர்த்தப்படுவார்! ஜெபித்தும் உழைத்தும் சிலுவை சுமந்தோர் தேவ வருகையில் பலனடைவார்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajanae Um Varukaikkaana Kaalakkurigal Therikindrana Yesuvae! Neer Varumpothu Vizhitthirundhavarkal Kotutthu Vaitthavarkal Vaarum Yesu Vaarum Vaarum Virainthu Vaarum Maritthu Uyirtthavar Inru Varukinraar Endra Ninaivudan Thaabarippom! Manggala Naal Vitiyum Kaalai Aengkum Kanniyaay Kaatthiruppom! Selvam Engko, Ullam Angkae Endra Unmaiyai Manathil Kolvomae! Vinnukkuriya Makimai Vaazhvai Mannilae Naam Natatthi Mutippom! Mayakkum Ulakam, Amizhtthum Mogam Ethiriyavanin Porigal Enpom! Vizhitthu Ethirtthum Vilakivaazhnthum Vanjjakan Mael Verri Peruvom! Thooya Ullam Thooya Sinthai Kaalamellaam Aninthiruppom! Jothimangkaamal Vaazhnthirunthu Thaeva Iraajiyam Peruga Uzhaippom! Unmaiyotu Katamai Mutitthor Inrum Enrum Uyartthappatuvaar! Jepitthum Uzhaitthum Siluvai Sumanthor Thaeva Varukaiyil Palanataivaar!