பாடல் #974
இராக்காலத்தில் உபத்திரவம்
🔤 Iraakkaalatthil Ubatthiravam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராக்காலத்தில் உபத்திரவம் வந்திடும் வேளையோ கலங்காதே என் மனமே கிருபை உண்டல்லவோ 1. உபத்திரவத்தின் வேளையில் ஆவி அணைந்து போனதோ உலக இன்பம் மீண்டும் காண உந்தனுள்ளம் ஓடுவதேன் 2. இராக்காலத்தின் முடிவிற்காய் யோபுவைப் போல் தவிப்பதேன் இரண்டு மடங்கு ஆசீர்;வாதம் இயேசு தேவன் தந்திடுவார் 3. உள்ளம் உணர்வினையடைந்திட உண்மை தேவன் தந்திட இராக்காலத்தின் அனுபவத்தில் இருதயத்தை புடமிடுவார் 4. இராக்காலத்தின் நேரத்தில் தாவீதைப் போல் பாடிடுவேன் எதைக் குறித்தும் கலங்க மாட்டேன் இயேசு தேவன் ஒளி தருவார் 5. உலக மனிதனின் தரிசனம் இராவில் கலக்கத்தை எழுப்புதே மறை பொருளின் விளக்கம் அளிக்கும் யோசேப்பின் தேவன் நமக்கு உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraakkaalatthil Ubatthiravam Vanthitum Vaelaiyo Kalangkaathae En Manamae Kirupai Undallavo 1. Ubatthiravatthin Vaelaiyil Aavi Anainthu Ponatho Ulaka Inbam Meentum Kaana Undhanullam Otuvathaen 2. Iraakkaalatthin Mutivirkaay Yopuvaip Pol Thavippathaen Irantu Matangku Aaseer;vaadham Yesu Devan Thanthituvaar 3. Ullam Unarvinaiyatainthida Unmai Devan Thanthida Iraakkaalatthin Anubavatthil Irudhayatthai Pudamituvaar 4. Iraakkaalatthin Naeratthil Thaaveethaip Pol Paatituvaen Ethaik Kuritthum Kalangga Maattaen Yesu Devan Oli Tharuvaar 5. Ulaka Manidhanin Tharisanam Iraavil Kalakkatthai Ezhupputhae Marai Porulin Vilakkam Alikkum Yosaeppin Devan Namakku Untu