பாடல் #9676
மங்கள கீதங்கள் பாடிடுவோம்
🔤 Manggala Keedhanggal Paatituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மங்கள கீதங்கள் பாடிடுவோம் மணவாளன் இயேசு மனமகிழ கறை திரை நீக்கி திருச்சபையாக்கி காத்தனர் கற்புள்ள கன்னிகையாய் கோத்திரமே யூதா கூட்டமே தோத்திரமே துதி சாற்றிடுவோம் புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம் ராஜ குமாரத்தி ஸ்தானத்திலே ராஜாதி ராஜன் இயேசுவோடே இன ஜன நாடு தகப்பனின் வீடு இன்பம் மறந்து சென்றிடுவோம் சித்திர தையலுடை அணிந்தே சிறந்த உள்ளான மகிமையிலே பழுதொன்றுமில்லா பரிசுத்தமான பாவைகளாக புறப்படுவோம் ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே அவர் மணவாட்டி ஆக்கினாரே விருந்தறை நேச கொடி ஒளி வீசு வீற்றிருப்போம் சிங்காசனத்தில் தந்தத்தினால் செய்த மாளிகையில் தயாபரன் இயேசு புறப்பாடுவார் மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர் மன்னன் மணாளன் வந்திடுவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manggala Keedhanggal Paatituvom Manavaalan Yesu Manamakizha Karai Thirai Neekki Thirucchapaiyaakki Kaatthanar Karpulla Kannikaiyaay Kotthiramae Yoothaa Koottamae Thotthiramae Thuthi Saarrituvom Puzhuthiyininremmai Uyartthinaarae Pugazhndhavar Naamatthaip Porrituvom Raaja Kumaaratthi Sthaanatthilae Raajaathi Raajan Yesuvotae Ina Jana Naatu Thakappanin Veetu Inbam Maranthu Senrituvom Sitthira Thaiyalutai Aninthae Sirandha Ullaana Makimaiyilae Pazhuthonrumillaa Parisutthamaana Paavaigalaaga Purappatuvom Aaranggal Pootti Alanggaritthae Avar Manavaatti Aakkinaarae Virundharai Naesa Koti Oli Veesu Veerriruppom Singkaasanatthil Thandhatthinaal Seytha Maalikaiyil Thayaabaran Yesu Purappaatuvaar Makizh Kamazh Veesa Makatthuva Naesar Mannan Manaalan Vanthituvar