பாடல் #9657
நீதியின் வலக்கரத்தால் நிதமும்
🔤 Neethiyin Valakkaratthaal Nidhamum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதியின் வலக்கரத்தாலே நிதமும் என்னைத் தாங்கிடும் - நீதிபரர் ஓங்கிய புயத்தினால் உயர்த்தி என்னை நிறைத்திடுமே - உயர்ந்தவரே உம்மைத் தேடி முகம் காண மனம் நாடி விழையுதே பலகோடி புதுப்பாடல் தினம் பாடி மகிழவே - நீதியின் 1. பாவத்தோடு பயணம் செய்து பழகிப் போன தால் வேதம் சொல்லும் வழியை விட்டு விலகி போனால் பாதங்களில் படிந்துவிட்டது பாவக்கறை நீங்கிடவே பரிசுத்த வசனத்தாலே கழுவி என்னை நிறைத்திடுமே பரிசுத்தரே - நீதியின் 2. பாவத்தின் மேல் ஜெயம் பெற தேவ ஆவி வேண்டுமே மாமிசத்தை ஜெயிக்க தூய ஆவி தாருமே ஆவியுடன் ஆத்துமா சரீரம் மாற்றிடவே பரிசுத்த ஆவியினால் நிரப்பி என்னை நடத்திடும் உயர்ந்தவரே - நீதியின் 3. மேகத்தோடு போனவரே நேசரேசுவை இந்த தேகம் விட்டு உம்மைச் சேர ஆவல் பெருகுதே தாகத்துடன் காத்திருக்கும் தாசர் மனம் ஏங்கிடுதே பரிசுத்த உதிரத்தால் கழுவி என்னை நிரப்பிடுமே பரிசுத்தரே - நீதியின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethiyin Valakkaratthaalae Nidhamum Ennaith Thaangkitum - Neethibarar Ongkiya Puyatthinaal Uyartthi Ennai Niraitthitumae - Uyarndhavarae Ummaith Thaeti Mugam Kaana Manam Naati Vizhaiyuthae Palakoti Puthuppaadal Thinam Paati Makizhavae - Neethiyin 1. Paavatthotu Payanam Seythu Pazhakip Pona Thaal Vaedham Sollum Vazhiyai Vittu Vilaki Ponaal Paadhanggalil Patinthuvittathu Paavakkarai Neengkidavae Parisuttha Vasanatthaalae Kazhuvi Ennai Niraitthitumae Parisuttharae - Neethiyin 2. Paavatthin Mael Jeyam Pera Thaeva Aavi Vaentumae Maamisatthai Jeyikka Thooya Aavi Thaarumae Aaviyudan Aatthumaa Sareeram Maarridavae Parisuttha Aaviyinaal Nirappi Ennai Natatthitum Uyarndhavarae - Neethiyin 3. Maegatthotu Ponavarae Naesaraesuvai Indha Thaegam Vittu Ummaich Saera Aaval Perukuthae Thaagatthudan Kaatthirukkum Thaasar Manam Aengkituthae Parisuttha Uthiratthaal Kazhuvi Ennai Nirappitumae Parisuttharae - Neethiyin