பாடல் #9584
ஆராதனைக்குகந்தவரே
🔤 Aaraadhanaikkugandhavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனைக்குகந்தவரே கனம் மகிமைக்கெல்லாம் பாத்திரரே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை உயர்த்தி ஆராதிக்கின்றோம் உந்தன் அன்பினால் எங்கள் உள்ளம் நிறைந்து - நன்றி நிறைவால் பொங்கி வழிகின்றேதே நீதியறியாத எங்களை உந்தன் நீதியாக்கிட - பாவமறியாத இயேசுவை நீர் பாவமாக்கினிரே நீதியின் உணர்வினால் உம்மிடம் நெருங்கிட - நன்மைகள் அடைந்திட திராணியை தந்தீரே இயேசுவின் நாமம் எங்களுடைய அதிகார பத்திரம் - உரிமையோடே உச்சரிப்போம் உபயோகப்படுத்துவோம் இயேசுவின் நாமத்தில அனைத்தையும் தந்திரே - தந்தை உம் அன்பினை எண்ணியே தொழுகிறோம் பிதாவே உந்தன் சுதந்தரராய் இயேசுவை வைத்திரே - எங்களை உடன் சுதந்தரராய் அவருடன் இணைத்தீரே எங்களின் சுதந்தரம் அனைத்தையும் அறிந்திட வார்த்தையை நோக்குவோம் வளமுடன் வாழ்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanaikkugandhavarae Kanam Makimaikkellaam Paatthirarae Ellaavarrirkum Maelaaga Ummai Uyartthi Aaraathikkinrom Undhan Anpinaal Enggal Ullam Nirainthu - Nanri Niraivaal Pongki Vazhikinraethae Neethiyariyaadha Enggalai Undhan Neethiyaakkida - Paavamariyaadha Yesuvai Neer Paavamaakkinirae Neethiyin Unarvinaal Ummidam Nerungkida - Nanmaigal Atainthida Thiraaniyai Thantheerae Yesuvin Naamam Enggalutaiya Athikaara Patthiram - Urimaiyotae Uccharippom Ubayogappatutthuvom Yesuvin Naamatthila Anaitthaiyum Thanthirae - Thanthai Um Anpinai Enniyae Thozhukirom Pithaavae Undhan Sudhandhararaay Yesuvai Vaitthirae - Enggalai Udan Sudhandhararaay Avarudan Inaittheerae Enggalin Sudhandharam Anaitthaiyum Arinthida Vaartthaiyai Nokkuvom Valamudan Vaazhvom