பாடல் #9573
உம் புகழைப் பாடுவது
🔤 Um Pugazhaip Paatuvathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் புகழைப் பாடுவது என் வாழ்வில் இன்பமையா உன் அருளைப் போற்றுவது என் வாழ்வின் செல்வமையா துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் இருப்பாய் கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய் அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய் உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய் பாவத்திலே வாழ்ந்திருந்தும நீ என்னையும் ஏன் அழைத்தாய் அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன் உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Pugazhaip Paatuvathu En Vaazhvil Inbamaiyaa Un Arulaip Porruvathu En Vaazhvin Selvamaiyaa Thunbatthilum Inbatthilum Nal Thanthaiyaay Iruppaay Kannayarak Kaatthirukkum Nal Annaiyaay Arukiruppaay Anpu Ennum Amudhatthinai Naan Arunthida Enakkalippaay Un Ninru Piriyaamal Nee Enrum Anaitthiruppaay Palluyiraip Pataitthiruppaay Nee Ennaiyum Aen Pataitthaay Paavatthilae Vaazhnthirunthuma Nee Ennaiyum Aen Azhaitthaay Anpinukku Ataikkum Thaazh Onru Illai Enrunarnthaen Un Anpai Maravaamal Naan Enrum Vaazhnthiruppaen