பாடல் #9562
துதிகன மகிமைக்கு பாத்திரரே
🔤 Thuthigana Makimaikku Paatthirarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகன மகிமைக்கு பாத்திரரே உம்மை அனுதினம் துதித்திடுவேன் அன்பே உந்தன் ஆசிகளை எண்ணவே ஆனந்தமே என்னில் பொங்குதே 1. நாடித்தேடி ஒடி உம் பாதம் வந்தேன் நன்மை செய்யும் தேவன் நீரல்லோ பாச வலையில் என்னை வீசி அணைத்தீர் நேசா உமக்கென்ன செய்குவேன் 2. பாவ சேற்றில் மூழ்கிய பாவி என்னை தேடி வந்த தேவன் நீரல்லோ தூக்கி எடுத்தீர் தூய ஆவியும் ஈந்தீர் தேவா என்னை சொந்தமாக்கினீர் 3. என்றும் உம்மோடு சீயோன் மலையில் நிற்பதும் என் பாக்கியமல்லோ ஆசையுடனே பூவில் காத்து நிற்கிறேன் ஆருயிரே வேகம் வாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigana Makimaikku Paatthirarae Ummai Anuthinam Thuthitthituvaen Anpae Undhan Aasigalai Ennavae Aanandhamae Ennil Pongkuthae 1. Naatitthaeti Oti Um Paadham Vanthaen Nanmai Seyyum Devan Neerallo Paasa Valaiyil Ennai Veesi Anaittheer Naesaa Umakkenna Seykuvaen 2. Paava Saerril Moozhkiya Paavi Ennai Thaeti Vandha Devan Neerallo Thookki Etuttheer Thooya Aaviyum Eentheer Thaevaa Ennai Sondhamaakkineer 3. Enrum Ummotu Seeyon Malaiyil Nirpathum En Paakkiyamallo Aasaiyudanae Poovil Kaatthu Nirkiraen Aaruyirae Vaegam Vaarumae