பாடல் #9558
தேவனே ஸ்தோத்திரம்
🔤 Devanae Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே ஸ்தோத்திரம் இயேசுவேஸ்தோத்திரம் ஆயிரம் ஆயிரம் ஆசிகள் - அருள் மழைபோல் என்னில் பொழிந்தீரே துன்பக்கடலை தாண்டிடும் நேரம் துயராய் மாறி சோர்ந்திடும் வேளை காத்தர்தாம் செய்த நன்மைகள் எண்ணி கணக்கில்லாஸ்தோத்திரம் செய்திடுவேனே சத்துரு என்னை சடுதியில் நெருக்கி இல்லாமற் போக எதிர்த்திடும் போது இயேசுவே வந்து யுத்தமே செய்தீர் சாத்தானின் தலையை நசுக்கி விட்டீரே செய்யாத குற்றங்கள் சுமத்திடுவார்கள் சொல்லாத வார்த்தைகள் சொன்னாய் என்பார்கள் - எவ்வித பொய்யையும் எதிர்க்காமல் சகிக்க - என் நெஞ்சை அன்பினால் நிறைந்திட செய்தீர் பூலோக இன்பங்கள் இடைவிடாதிழுக்க பொல்லாத மனிதர்கள் பொறுமையை சோதிக்க உம்மைப் போல் ஜீவிக்க உத்தமர் இயேசுவே உன்னத பெலனை உள்ளத்தில் தந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Sthotthiram Yesuvaesthotthiram Aayiram Aayiram Aasigal - Arul Mazhaipol Ennil Pozhintheerae Thunbakkatalai Thaantitum Naeram Thuyaraay Maari Sornthitum Vaelai Kaattharthaam Seytha Nanmaigal Enni Kanakkillaasthotthiram Seythituvaenae Satthuru Ennai Satuthiyil Nerukki Illaamar Poga Ethirtthitum Pothu Yesuvae Vanthu Yutthamae Seytheer Saatthaanin Thalaiyai Nasukki Vitteerae Seyyaadha Kurtranggal Sumatthituvaarkal Sollaadha Vaartthaigal Sonnaay Enpaarkal - Evvidha Poyyaiyum Ethirkkaamal Sakikka - En Nenjsai Anpinaal Nirainthida Seytheer Poologa Inbanggal Itaivitaathizhukka Pollaadha Manidharkal Porumaiyai Sothikka Ummaip Pol Jeevikka Utthamar Yesuvae Unnatha Pelanai Ullatthil Thantheer