பாடல் #955
இரங்கும் இரங்கும்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
இரங்கும் இரங்கும் கருணைவாரி, ஏசு ராசனே, - பவ – நாசநேசனே! 1. திரங்கோண்டாவி வரங்கொண்டுய்யச் சிறுமை பார் ஐயா – ஏழைவறுமை தீர் ஐயா, (இரங்கும்) 2. அடியன் பாவக் கடி விஷத்தால் அயர்ந்து போகின்றேன் – மிகப் பயந்து சாகின்றேன்(இரங்கும்) 3. தீமை அன்றி வாய்மை செய்யத் தெரிகிலேன், ஐயா, - தெரிவைப் – புரிகிலேன், ஐயா(இரங்கும்) 4. பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் பரிந்து கேள், ஐயா, - தயை – புரிந்து மீள், ஐயா (இரங்கும்)