பாடல் #9525
நம்பி வந்தேன் இயேசுவே
🔤 Nampi Vanthaen Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பி வந்தேன் இயேசுவே என்னைக் குணப்படுத்தும் வாழ்வும் வழியும் வளமும் நலமும் நீரே என்னும் உண்மையை எனது நலமே எண்ணி வாழ்ந்து பாவம் செய்தேன் இரங்குவீர் உள்ளத்தாலும் உடலினாலும் உடைந்து போனேன் பாருமே தான் வாழ பிறரைக் கெடுத்த பாவி என்னை மன்னியும் மனிதரிடையே உம்மைக் காணும் பார்வை எனக்குத் தாருமே இரக்கம் காட்டி இரக்கம் அடையும் இதயம் எனக்கு அருளுமே வாழ்வுக்கான உந்தன் வாக்கை கேட்கும் செவியைத் தாருமே உண்மை உழைப்பில் உயர்ந்து வாழும் உணர்வு என்னில் ஊட்டுமே எனக்குத் தீமை செய்த பேரை மன்னித்து மறக்க உதவுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampi Vanthaen Yesuvae Ennaik Kunappatutthum Vaazhvum Vazhiyum Valamum Nalamum Neerae Ennum Unmaiyai Enathu Nalamae Enni Vaazhnthu Paavam Seythaen Irangkuveer Ullatthaalum Udalinaalum Utainthu Ponaen Paarumae Thaan Vaazha Piraraik Ketuttha Paavi Ennai Manniyum Manidharitaiyae Ummaik Kaanum Paarvai Enakkuth Thaarumae Irakkam Kaatti Irakkam Ataiyum Idhayam Enakku Arulumae Vaazhvukkaana Undhan Vaakkai Kaetkum Seviyaith Thaarumae Unmai Uzhaippil Uyarnthu Vaazhum Unarvu Ennil Oottumae Enakkuth Theemai Seytha Paerai Mannitthu Marakka Udhavumae