பாடல் #9514
ஆண்டவர் சன்னிதி வாருங்களே
🔤 Aandavar Sannithi Vaarunggalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவர் சன்னிதி வாருங்களே நல் ஆனந்தமுட னே பாடுங்களே இயேசுவின் பிறப்பில் மகிழுங்களே இந்த இகமதில் நாளும் முழங்குங்களே வாருங்களே வாருங்களே - 2 உள்ளங்கள் மகிழும் உறவுகள் மகிழும் இறைவன் அன்பில் வாழ்ந்து வந்தால் அடுத்தவர் நலனில் நாட்டமே கொண்டால் ஆண்டவர் வழியினில் நடந்திடலாம் குறைகளைக் காணாமல் பிறரை ஏற்றால் இயேசுவை அவரில் கண்டிடலாம் - 2 இறைபணி தொடர் இறையாட்சி மலர் இணைந்திடுவோம் நாம் இறைவனிலே சாதிகள் இல்லை பேதங்கள் இல்லை இறைவன் இயேசு வருகையிலே நீதியுமுண்டு சமத்துவமுண்டு இறைவன் வாழும் சமூகத்திலே அன்பே கடவுள் என்பதை உணர்ந்தால் இனிய உலகம் படைத்திடலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavar Sannithi Vaarunggalae Nal Aanandhamuda Nae Paatunggalae Yesuvin Pirappil Makizhunggalae Indha Igamathil Naalum Muzhangkunggalae Vaarunggalae Vaarunggalae - 2 Ullanggal Makizhum Uravugal Makizhum Iraivan Anpil Vaazhnthu Vanthaal Atutthavar Nalanil Naattamae Kontaal Aandavar Vazhiyinil Natanthidalaam Kuraigalaik Kaanaamal Pirarai Aerraal Yesuvai Avaril Kantidalaam - 2 Iraibani Thodar Iraiyaatsi Malar Inainthituvom Naam Iraivanilae Saathigal Illai Paedhanggal Illai Iraivan Yesu Varukaiyilae Neethiyumuntu Samatthuvamuntu Iraivan Vaazhum Samoogatthilae Anpae Katavul Enbathai Unarnthaal Iniya Ulakam Pataitthidalaam