பாடல் #9482
கன்னி ஈன்ற செல்வமே
🔤 Kanni Eendra Selvamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன் ஆரிரோ ஆராரோ எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய் ஞாலம் காக்கும் நாதன் நீ சீலக்கரத்தில் அடங்கினாய் தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன் வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய் ஆற்றல் அனைத்தின் ஊற்றும் நீ அன்னை துணையை நாடினாய் இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanni Eendra Selvamae Immannil Vandha Theyvamae Kannae Maniyae Amudhamae En Ponnae Thaenae Inbamae Ennam Maevum Vannamae Ennaith Thaeti Vandhathaen Aariro Aaraaro Engkum Niraindha Iraivan Nee Nangkai Udharam Otungkinaay Njaalam Kaakkum Naadhan Nee Seelakkaratthil Adangkinaay Thaay Un Pillai Allavaa Saeyaay Maarum Vinthai Aen Valla Thaeva Vaartthai Nee Vaayillaadha Sisuvaanaay Aartral Anaitthin Oorrum Nee Annai Thunaiyai Naatinaay Inba Vaazhvin Maiyam Nee Thunba Vaazhvaith Thaerndhathaen