பாடல் #9457
ஒவ்வொரு பகிர்வும் புனித
🔤 Ovvoru Pakirvum Punidha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம் ஒவ்வொரு மனிதரும் இன்னொரு இயேசுவாம் அந்த இயேசுவை உணவாய் உணர்போம் இந்தப் பாரினில் அவராய் வாழ்வோம் இருப்பதைப் பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலும் இல்லையே இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே நமை இழப்போம் பின்பு உயிர்ப்போம்நாளைய உலகின் விடியலாகவே பாதங்கள் கழுவிய பணிவிடைச் செயலே வேதமாய் ஆனதே புரட்சியை ஒடுக்கிய சிலுவைக் கொலையே புனிதமாய் நிலைத்ததே இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே இதை உணர்வோம் நமைப் பகிர்வோம் இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ovvoru Pakirvum Punidha Viyaazhanaam Ovvoru Paliyum Punidha Velliyaam Ovvoru Paniyum Uyirppin Njaayiraam Ovvoru Manidharum Innoru Yesuvaam Andha Yesuvai Unavaay Unarpom Indhap Paarinil Avaraay Vaazhvom Iruppathaip Pakirvathil Perukindra Inbam Ethilum Illaiyae Izhappathai Vaazhvena Aerritum Ilatsiyam Iruthiyil Vellumae Veethiyil Vaatum Naeriya Mananggal Neethiyil Nilaitthitumae Namai Izhappom Pinpu Uyirppomnaalaiya Ulakin Vitiyalaagavae Paadhanggal Kazhuviya Panivitaich Seyalae Vaedhamaay Aanathae Puratsiyai Otukkiya Siluvaik Kolaiyae Punidhamaay Nilaitthathae Yesuvin Paliyum Irappum Uyirppum Iraiyanpin Saatsigalae Ithai Unarvom Namaip Pakirvom Yesuvin Kolkaigal Nammil Vaazhavae