பாடல் #9455
தந்தையே உம் கையில்
🔤 Thanthaiyae Um Kaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன் நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும் உம்முடைய நீதியின்படி என்னை விடுவித்தருளும் உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே வார்த்தையில் தவறாத இறைவா நீர் என்னை மீட்டருளும் என் எதிரிகள் அனைவருடையவும் பழிச்சொல்லுக்கு நான் ஆளானேன் என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன் எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன் வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஒடுகின்றனர் இறந்து போனவன் போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன் உடைந்து போன மட்கலத்தைப் போலானேன் ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நம்பிக்கைவைக்கிறேன் நீரே என் கடவுள் என்றேன் என் கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே என் எதிரிகளிடமிருந்தும் என்னை துன்புறுத்துவோரிடமிருந்தும் நீர் என்னை விடுவித்தருளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthaiyae Um Kaiyil En Aaviyai Oppataikkiraen Aandavarae Ummidam Ataikkalam Pukukiraen Naan Orunaalum Aemaartram Ataiya Vitaathaeyum Ummutaiya Neethiyinbati Ennai Vituvittharulum Um Kaiyil En Aaviyai Oppataikkiraen Aandavarae Vaartthaiyil Thavaraadha Iraivaa Neer Ennai Meettarulum En Ethirigal Anaivarutaiyavum Pazhichsollukku Naan Aalaanaen En Ayalaarin Nakaippukku Ilakkaanaen Enakku Arimugamaanavarkalin Acchatthukkuriyavan Aanaen Veliyae Ennaik Kaankiravarkal Ennaivittu Otukindranar Iranthu Ponavan Pol Pirar Kannukku Maraivaanaen Utainthu Pona Matkalatthaip Polaanaen Aanaal Aandavarae Naan Ummeethu Nampikkaivaikkiraen Neerae En Katavul Enraen En Kathi Um Kaiyil Ullathu Aandavarae En Ethirigalidamirunthum Ennai Thunpurutthuvoridamirunthum Neer Ennai Vituvittharulum