பாடல் #9438
உன் புகழைப் பாடுவது
🔤 Un Pugazhaip Paatuvathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமைய்யா உன் அருளைப் போற்றுவது என் வாழ்வின் செல்வமைய்யா துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீ இருப்பாய் அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய் உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் - 2 பல்லுயிரைப் படைத்திருப்பாய் - நீ என்னையும் ஏன் படைத்தாய் பாவத்திலே வாழ்ந்திருந்தும் - நீ என்னையும் ஏன் அழைத்தாய் ( 2 ) அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன் உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Pugazhaip Paatuvathu En Vaazhvin Inbamaiyyaa Un Arulaip Porruvathu En Vaazhvin Selvamaiyyaa Thunbatthilum Inbatthilum Nal Thanthaiyaay Nee Iruppaay Anpu Enum Amudhatthinai Naan Arunthida Enakkalippaay Un Ninru Piriyaamal Nee Enrum Anaitthiruppaay - 2 Palluyiraip Pataitthiruppaay - Nee Ennaiyum Aen Pataitthaay Paavatthilae Vaazhnthirunthum - Nee Ennaiyum Aen Azhaitthaay ( 2 ) Anpinukku Ataikkum Thaazh Onru Illai Enrunarnthaen Un Anpai Maravaamal Naan Enrum Vaazhnthiruppaen