பாடல் #9430
நன்றி சொல்லிப் பாடுகிறேன் கானம்
🔤 Nanri Sollip Paatukiraen Kaanam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்லிப் பாடுகிறேன் கானம் உன் அன்பாலே உருவான ராகம் கரம் கூப்பி உன்னைத் தொழுதேன் நான் எழுந்திட வலுவானாய் வரமாகி என்னில் நிறைந்தாய் நான் உயர்ந்திட உறமானாய் இறங்கிடும் மனங்களில் நீயென நிறைந்திடும் கருணையின் இறைவனே நன்றிச் சொல்லிப் பாடுகிறோம் கானம் உன் அன்பாலே உருவான ராகம் முள் நிறைந்த பாதையை மலராக்கினாய் அலைகடலை கடக்க படகானாய் அத்தனையும் இறை உந்தன் கொடையானது நன்றி என்ற ஒரு வார்த்தை குறைவானது நன்றி சொல்லி . . . . பகையினால் உறவிழந்தேன் பரிவு கொண்டாய் உவகையால் இணைந்திட வழியும் சொன்னாய் விழிந்திடும் இடர்களில் அரணானது ஆயனாம் உனதன்பு நிறைவானது நன்றி சொல்லி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Sollip Paatukiraen Kaanam Un Anpaalae Uruvaana Raagam Karam Kooppi Unnaith Thozhuthaen Naan Ezhunthida Valuvaanaay Varamaaki Ennil Nirainthaay Naan Uyarnthida Uramaanaay Irangkitum Mananggalil Neeyena Nirainthitum Karunaiyin Iraivanae Nanrich Sollip Paatukirom Kaanam Un Anpaalae Uruvaana Raagam Mul Niraindha Paathaiyai Malaraakkinaay Alaigatalai Katakka Patakaanaay Atthanaiyum Irai Undhan Kotaiyaanathu Nanri Endra Oru Vaartthai Kuraivaanathu Nanri Solli . . . . Pakaiyinaal Uravizhanthaen Parivu Kontaay Uvakaiyaal Inainthida Vazhiyum Sonnaay Vizhinthitum Idarkalil Aranaanathu Aayanaam Unathanpu Niraivaanathu Nanri Solli