பாடல் #9407
தெய்வீக ராகம் தேன்சிந்தும்
🔤 Theyveega Raagam Thaensinthum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வீக ராகம் தேன்சிந்தும் ராகம் - 2 தேவா உன் நினைவாக உருவான ராகம் - 2 என் பாடல் தானே உன் கோயில் நாளும் அரங்கேறும் வேளை ஆனந்தமே உயிரே வருக உறவைத் தருக உயிரே உனக்காக உருவான பாடல் ! உறவே உனக்காக நான் பாடும் பாடல் ( 2 ) 1. உன் நாமம் சொல்லாத நாளில்லையே ! எந்நாளும் நினைக்காத நெஞ்சில்லையே உன் நாமம் தானே நெஞ்சாரப் பாட சுகமான ராகம் நான் பாடும் பாடல் - உயிரே . 2. உன்னாட்சி உயராத இடமில்லையே உன்னாட்சி மலராத மனமில்லையே உன் அன்பைத் தானே நாள்தோறும் பாட மேலான ராகம் நான் பாடும் பாடல் - உயிரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyveega Raagam Thaensinthum Raagam - 2 Thaevaa Un Ninaivaaga Uruvaana Raagam - 2 En Paadal Thaanae Un Koyil Naalum Arangkaerum Vaelai Aanandhamae Uyirae Varuga Uravaith Tharuga Uyirae Unakkaaga Uruvaana Paadal ! Uravae Unakkaaga Naan Paatum Paadal ( 2 ) 1. Un Naamam Sollaadha Naalillaiyae ! Ennaalum Ninaikkaadha Nenjsillaiyae Un Naamam Thaanae Nenjsaarap Paada Sugamaana Raagam Naan Paatum Paadal - Uyirae . 2. Unnaatsi Uyaraadha Idamillaiyae Unnaatsi Malaraadha Manamillaiyae Un Anpaith Thaanae Naalthorum Paada Maelaana Raagam Naan Paatum Paadal - Uyirae