பாடல் #9402
குறையாத அன்பு கடல் போல வந்து
🔤 Kuraiyaadha Anpu Katal Pola Vanthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குறையாத அன்பு கடல் போல வந்து நிறைவாக என்னில் அலை மோதுதே - அந்த அலைமீது இயேசு அசைந்தாடி வரவே பலகோடி கீதம் உருவாகுதே 1. கண்மூடி இரவில் நான் தூங்கும் போது கண்ணான இயேசு என்னைக் காக்கின்றார் ( 2 ) - உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி மண்மீது வாழ வழிசெய்கிறார் ஆ . . . . ( நான் ) - 2. அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும் தொடர்கின்ற இரவின் முடிவாகுமே ( 2 ) - மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர் துடைக்கின்ற இயேசு அரசாகுமே ஆ . ( கண்ணீர் )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuraiyaadha Anpu Katal Pola Vanthu Niraivaaga Ennil Alai Mothuthae - Andha Alaimeethu Yesu Asainthaati Varavae Palakoti Keedham Uruvaakuthae 1. Kanmooti Iravil Naan Thoongkum Pothu Kannaana Yesu Ennaik Kaakkinraar ( 2 ) - Unnai Ennaadha Ennai Ennaalum Enni Manmeethu Vaazha Vazhiseykiraar Aa . . . . ( Naan ) - 2. Ativaanam Thonrum Vitivelli Enrum Thodarkindra Iravin Mutivaakumae ( 2 ) - Mannil Thutikkindra Aezhai Vatikkindra Kanneer Thutaikkindra Yesu Arasaakumae Aa . ( Kanneer )