பாடல் #9400
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
🔤 Ovvoru Pakirvum Punidha Viyaazhanaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம் ஒவ்வொரு மனிதரும் இன்னொரு இயேசுவாம் அந்த இயேசுவை உணவாய் உண்போம் இந்த பாரினில் அவராய் வாழ்வோம் . இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலும் இல்லையே இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே - 2 வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே நம்மை இழப்போம் பின்பு உயிர்ப்போம் பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே புரட்சியை ஒடுக்கிய சிலுவைக் கொலையே ! புனிதமாய் நிலைத்ததே - 2 இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே - 2 இதை உணர்வோம் நம்மை பகிர்வோம் - 2 இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ovvoru Pakirvum Punidha Viyaazhanaam Ovvoru Paliyum Punidha Velliyaam Ovvoru Paniyum Uyirppin Njaayiraam Ovvoru Manidharum Innoru Yesuvaam Andha Yesuvai Unavaay Unpom Indha Paarinil Avaraay Vaazhvom . Iruppathai Pakirvathil Perukindra Inbam Ethilum Illaiyae Izhappathai Vaazhvena Aerritum Ilatsiyam Iruthiyil Vellumae - 2 Veethiyil Vaatum Naeriya Mananggal Neethiyil Nilaitthitumae Nammai Izhappom Pinpu Uyirppom Paadhanggal Kazhuviya Panivitai Seyalae Vaedhamaay Aanathae Puratsiyai Otukkiya Siluvaik Kolaiyae ! Punidhamaay Nilaitthathae - 2 Yesuvin Paliyum Irappum Uyirppum Iraiyanpin Saatsigalae - 2 Ithai Unarvom Nammai Pakirvom - 2 Yesuvin Kolkaigal Nammil Vaazhavae