பாடல் #932
இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
🔤 Yesuvai Nampinor Maandathillai
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும் சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார் பங்கம் வராதென்னை ஆதரிப்பார் நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார் விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் வறட்சி மிகுந்த காலத்திலும் பக்தன் வலது பாரிசத்திலே கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான் இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே ஏகிப் பறந்திடும் பக்தரோடே சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே ஜெய கெம்பீரமே எனக்குண்டே ஏழை உன் ஆத்துமா பாதாளத்தில் என்றும் அழிந்திட விட்டுவிடார் தம் சமூகம் நித்ய பேரின்பமே சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே அங்கே அநேக வாசஸ்தலங்கள் அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே நேர்த்தியான இடங்களில் உந்தன் நித்திய பங்கு கிடைத்திடுமே நாசியில் சுவாசமுள்ள மாந்தரை நம்புவதல்ல தம் ஆலோசனை கோர பயங்கர காற்றடித்தும் கன்மலை மேல் கட்டும் வீடுநிற்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Nampinor Maandathillai Ennenna Thunbanggal Naerittaalum Singgatthin Vaayininrum Iratsippaar Panggam Varaathennai Aadharippaar Nenjjamae Nee Anjsitaathae Nampinoraik Kirupai Soozhnthituthae Immattum Kaatthavar Immaanuvael Innamum Kaatthunnai Natatthuvaar Visuvaasatthaal Neethimaan Pizhaippaan Varatsi Mikundha Kaalatthilum Pakthan Valathu Paarisatthilae Kartthar Thaam Nirpathaal Asainthitaan Yesuvin Naamatthil Jeyam Perrae Aekip Paranthitum Paktharotae Saernthenrum Vaazhnthitum Aikkiyatthilae Jeya Kempeeramae Enakkuntae Aezhai Un Aatthumaa Paathaalatthil Enrum Azhinthida Vittuvitaar Tham Samoogam Nithya Paerinbamae Sampoorna Aanandham Pongkitumae Angkae Anaega Vaasasthalanggal Anpin Pithaa Veettil Jolikkuthae Naertthiyaana Idanggalil Undhan Nitthiya Pangku Kitaitthitumae Naasiyil Suvaasamulla Maandharai Nampuvathalla Tham Aalosanai Kora Payanggara Kaartratitthum Kanmalai Mael Kattum Veetunirkum