பாடல் #9313
காணிக்கை தர நான் வருகின்றேன்
🔤 Kaanikkai Thara Naan Varukinraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காணிக்கை தர நான் வருகின்றேன் உன் கரங்களில் என்னைத் தருகின்றேன் காணிக்கை தர நான் வருகின்றேன் ( 2 ) 1. என்னக் கொடுத்தாலும் பயனில்லை - நான் என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் ( 2 ) என்னையே தான் நீ கேட்கின்றாய் - நான் என்னையே முழுவதும் தருகின்றேன் 2. சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் - மனம் உள்ளெமும் ஆசைகள் ஒவ்வொன்றும் ( 2 ) ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் - அதை பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் ( 2 )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanikkai Thara Naan Varukinraen Un Karanggalil Ennaith Tharukinraen Kaanikkai Thara Naan Varukinraen ( 2 ) 1. Ennak Kotutthaalum Payanillai - Naan Ennaik Kotukkaamal Porul Kotutthaal ( 2 ) Ennaiyae Thaan Nee Kaetkinraay - Naan Ennaiyae Muzhuvathum Tharukinraen 2. Sindhanai Sol Seyal Thiran Anaitthum - Manam Ullemum Aasaigal Ovvonrum ( 2 ) Oru Thuli Neeraayk Kalakkinraen - Athai Payanulla Paliyaay Maarrituvaay ( 2 )