பாடல் #93
அனுதின வாழ்க்கையிலே
🔤 Anuthina Vaazhkkaiyilae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம் நீதியின் தேவன் அவர் அதிசயமானவராம் சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம் நீதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சீர்ப்படுத்தும் - 2 கர்த்தரின் பாதைக்கு விலகிய நினிவே நகருக்காய் தேவன் பரிதபித்தார் நினிவே அல்ல தர்ஷீஷ் போன யோனாவை கடலில் வழி மறித்தார் மூன்ற நாள் இரவுமாய் பகலுமாய் மீனுக்குள் கதறியே அழுதவன் நினிவேயின் ஜனங்களும் இராஜாவும் திருந்தவே சுவிசேஷம் அறிவித்தான் தேவ வைராக்கியம் நினிவேயைக் காத்து அல்லவோ - 2 பலிகளைப் பார்க்கிலும் தேவனுக்கே நாம் பணிவது தானே உத்தமமாம் கீழ்ப்படியாத சவுல் என்னும் இராஜா பதவியை அன்று இழந்தானே தாவீது சிறுவனாய் இருந்தாலும் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டான் கோலியாத் பலவானாய் எண்ணப்பட்டும் மாண்டானே ஒரு நொடிப் பொழுதிலே தேவ வைராக்கியம் தாவீது பெற்ற வெற்றியே - 2 யுத்தத்தில் வல்ல கர்த்தரின் நாமம் தரித்தவர் தேவனின் பிள்ளைகளால் ஜாதிகள் திரளாய்ப் பெருகவும் செய்து அவர் முன் களிகூர்ந்து மகிழச் செய்வார் தேசத்தில் சிலைகளே தெய்வமாம் பாவங்கள் பெருகியே அழியுதே பலிகளை விரும்பாத தேவனை அறிந்தவர் ஒரு சிலர் மட்டுமே கர்த்தரே தெய்வம் என்றே நாம் சொல்லுவோம் எலியாபோல் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anuthina Vaazhkkaiyilae Karttharukkup Payappatuvom Neethiyin Devan Avar Athisayamaanavaraam Saenaiyin Karttharin Thaeva Vairaakkiyam Neethiyai Nilaippatutthum Thaesatthaich Seerppatutthum - 2 Karttharin Paathaikku Vilakiya Ninivae Nakarukkaay Devan Paridhapitthaar Ninivae Alla Tharsheesh Pona Yonaavai Katalil Vazhi Maritthaar Moondra Naal Iravumaay Pakalumaay Meenukkul Kathariyae Azhudhavan Ninivaeyin Jananggalum Iraajaavum Thirundhavae Suvisaesham Arivitthaan Thaeva Vairaakkiyam Ninivaeyaik Kaatthu Allavo - 2 Paligalaip Paarkkilum Devanukkae Naam Panivathu Thaanae Utthamamaam Keezhppatiyaadha Savul Ennum Iraajaa Pathaviyai Anru Izhanthaanae Thaaveethu Siruvanaay Irunthaalum Karttharaal Apishaegam Pannappattaan Koliyaath Palavaanaay Ennappattum Maantaanae Oru Notip Pozhuthilae Thaeva Vairaakkiyam Thaaveethu Pertra Verriyae - 2 Yutthatthil Valla Karttharin Naamam Tharitthavar Devanin Pillaigalaal Jaathigal Thiralaayp Perugavum Seythu Avar Mun Kalikoornthu Makizhach Seyvaar Thaesatthil Silaigalae Theyvamaam Paavanggal Perukiyae Azhiyuthae Paligalai Virumpaadha Devanai Arindhavar Oru Silar Mattumae Karttharae Theyvam Enrae Naam Solluvom Eliyaapol - 2