பாடல் #9269
அடியோர் யாம் தரும்
🔤 Atiyor Yaam Tharum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடியோர் யாம் தரும் காணிக்கையை அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே ( 2 ) 1. பாவியென்றெம்மைப் பாராமல் பாவத்தின் தீமையை அடையாமல் ( 2 ) பரிகாரம் என ஏற்றிடுவாய் பலியாய் எமை நீ மாற்றிடுவாய் 2. மேலொரு வாழ்வு உண்டு என்று - எம் மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் மேலும் துன்பங்கள் அடைந்தாலும் மேன்மையின் பலியாய்த் தருகின்றோம் 3. வாழ்வுக்கு ஒருநாள் முடிவு உண்டு - விண் வாழ்வுக்கு எமக்கென்று எது உண்டு ( 2 ) என் மனம் அறிந்ததன் பயன் என்னவோ எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atiyor Yaam Tharum Kaanikkaiyai Anpaay Aerpaay Aandavarae ( 2 ) 1. Paaviyenremmaip Paaraamal Paavatthin Theemaiyai Ataiyaamal ( 2 ) Parikaaram Ena Aerrituvaay Paliyaay Emai Nee Maarrituvaay 2. Maeloru Vaazhvu Untu Enru - Em Maelezhum Thunbatthai Marakkinrom Maelum Thunbanggal Atainthaalum Maenmaiyin Paliyaayth Tharukinrom 3. Vaazhvukku Orunaal Mutivu Untu - Vin Vaazhvukku Emakkenru Ethu Untu ( 2 ) En Manam Arindhathan Payan Ennavo Ellaam Arindhavar Neerallavo