பாடல் #9266
வழிகாட்டும் என் தெய்வமே
🔤 Vazhikaattum En Theyvamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே ( 2 ) நதிமீது அலைந்தாடும் அகல்போலவே கதியெதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலை பாருமே அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி துயரோடு போராடும் என் வாழ்வின் நலனாகி எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே எந்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன் உன்பாத நிழல்நாடும் மனம் கேட்கிறேன் நீரின்றியே மண்ணில் வளமில்லையே நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே எந்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன் உன் பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன் எனைக்காக்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடிப் பயனேது துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது பலனாக கைமீது வா - இங்கு புலனாகும் இறையாகவா என் பாதை முடிவாகும் உன் தாளிலே என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ உன் பார்வைகள் என் வழியாகுமோ என் பாதை முடிவாகும் உன் தாளிலே என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர்வீச எனை ஏற்றவா ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வில் பலன்தானே நிறைவாழ்வின் விதையாகவே - எங்கள் நிலவாழ்வு பயன் காணவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhikaattum En Theyvamae Thunaiyaaga Enil Vaarumae ( 2 ) Nathimeethu Alainthaatum Agalpolavae Kathiyethum Theriyaamalae Naan Thatumaarum Nilai Paarumae Anpaaki Arulaaki Ennotu Onraaki Thuyarotu Poraatum En Vaazhvin Nalanaaki Enaith Thaangkum En Theyvamae En Nizhalaaga Ezhum Theyvamae Ennaalum Unaith Thaetum Varam Kaetkiraen Unpaadha Nizhalnaatum Manam Kaetkiraen Neerinriyae Mannil Valamillaiyae Nilaminriyae Uyir Vaazhvillaiyae Ennaalum Unaith Thaetum Varam Kaetkiraen Un Paadha Nizhal Naatum Manam Kaetkiraen Enaikkaakkum En Theyvamae En Uyiraaga Ezhum Theyvamae Nilavengkum Olirnthaalum Vizhimootip Payanaethu Thuyar Mootum Manamundhan Arul Kaanum Vakaiyaethu Palanaaga Kaimeethu Vaa - Ingku Pulanaakum Iraiyaagavaa En Paathai Mutivaakum Un Thaalilae En Vaazhvu Vitivaakum Annaalilae Un Vaartthaigal En Vaazhvaakumo Un Paarvaigal En Vazhiyaakumo En Paathai Mutivaakum Un Thaalilae En Vaazhvu Vitivaakum Annaalilae Irul Neekkum Vilakkaagavae Naan Sudarveesa Enai Aertravaa Aalpola Valarnthaalum Aarambam Mulaithaanae Vinvaazhvin Uyarvellaam Ivvaazhvil Palanthaanae Niraivaazhvin Vithaiyaagavae - Enggal Nilavaazhvu Payan Kaanavaa